இறைவனின் பூரண அருளை எளிதில் பெற இந்த நேரத்தில் வழிபடுங்கள்

Sivan-God

இறைவனை மனதார எப்போது வேண்டினாலும் அவர் நமக்கு அருள் மழை பொழிவார் என்பது உண்மை தான் என்றாலும் நமது சாஸ்திரங்களில் இறைவனை வணகுவதற்கான சிறந்த நேரமாக கூறப்படுவது பிரம்ம முகூர்த்த நேரமே.

shivan

சித்தர்களின் கூற்றுப்படி பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை மூன்றரை மணியில் இருந்து ஐந்தரை மணி வரை ஆகும். இதுவே இறைவனை வணங்க மிக சிறந்த நேரமாக கருதப்படுகிறது. பிரம்ம முகூர்த்த வேளைக்கு எந்த ஒரு தோஷமும் எப்போதும் கிடையாது.

ஒருவர் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து நீராடிவிட்டு இறைவனை வழிபடுவதன் பயனாக அன்றைய பொழுது மிக சிறப்பாக இருக்கும். எவர் ஒருவர் பிரம்ம முகூர்த்த வேலையில் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடுகிறாரோ அவருக்கு அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.

vilaku

பிரம்ம முகூர்த்த வேலையில் மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக அந்த மந்திரத்தின் சக்தியானது அன்றய நாள் முழுக்க அவர் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றிபெற வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இதே போல சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிடங்களை பைரவ முகூர்த்தம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். அதாவது 6 மணிக்கு சூரியன் உதிக்கிறது என்றால் 5.46 முதல் 6.4 வரை உள்ள இந்த கால அவகாசமே பைரவ முகூர்த்தம் என்று கருதப்படுகிறது. இந்த நேரமும் இறைவனை வழிபட மிக சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

shivan

இதையும் படிக்கலாமே:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்

இவை இரண்டையும் தவற விடுபவர்கள், முடிந்த வரை காலை 7.30 மணிக்குள் நீராடிவிட்டுட்டு இறைவனை வணங்குவது சிறந்தது.