எந்த திசையில் அமர்ந்து சாப்பிடவே கூடாது தெரியுமா?

sivan-6
- Advertisement -

உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என கூறினார். உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உண்கிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும்.

food

சுத்தமான எளிய உணவை ஒருவர் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் அவரது கல்வி, திறமை, கலைகள் யாவும் வளரும். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், செல்வம் பெருகும். பீடை ஒழியும். தெற்கு நோக்கி அமர்ந்து உண்பதால் அழியாத புகழ் உண்டாகும், சொல்வன்மை பெருகும். ஆனால், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அந்த உணவே நோயை உருவாக்கும். எனவே, வடக்கு நோக்கி உண்பதைத் தவிர்க்கவேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர்.

- Advertisement -

ஏன் என்றால், கிழக்கு திசை இந்திரனுக்கு சொந்தமானது. இதனால் அவரது கட்டளைக்குட்பட்ட புதனும், குருவும் அறிவைக் கொடுப்பார்கள். மேற்கு திசையின் அதிபதியான மகாலட்சுமி செல்வத்தை வாரி வழங்குவதில் ஆச்சர்யமில்லை. வடக்கு திசை ருத்திரனுக்கு உறைவிடம் எனவே, அது நோயை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

food

தெற்கு திசை எமனுக்கு உரியது. தர்மத்தின் தலைவனான எமன் நீங்காத புகழைத் தருபவன். அதைப்போலவே தனது வீட்டைத் தவிர உறவினர், நண்பர்கள் வீட்டில் உண்ணும்போது மேற்கு திசையை நோக்கி உண்ணக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அந்த உறவு கெட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.

food

கைகளால்தான் உண்ணவேண்டும். நன்கு சுத்தம் செய்த கரத்தால் உண்பதே பல நோய்களை வரவிடாமல் தடுக்கும். கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவைக் கைகளால் உண்ணும்போது உடலின் நரம்புகள் நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடை பெறுகிறது. ஐந்து விரல்களையும் குவித்து உண்பது ஒரு சூட்சும முத்திரை நிலை. இதனால் ஜீரண மண்டலம் துரிதமாகச் செயல்படுகிறது.

- Advertisement -