உங்கள் லக்னபடி என்ன செய்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம் தெரியுமா ?

astrology-2

மேஷம்

meshamமேஷ லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே எல்லோரையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் அறிவாளிகளாகவும் திகழ்வார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் செவ்வாய். மேஷ லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய் பகவான் 1 மற்றும் 8-ம் வீட்டிற்கு அதிபதியாகிறார். இந்த இரண்டு இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அவர் பலம் மிக்கவராகவே இருக்கிறார்.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான செவ்வாய் வலுவின்றி இருந்தால் செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டுவருவதாலும், சஷ்டி அன்று விரதமிருந்து முருகனை வழிபட்டாலும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஜாதகத்தில் சூரியன் வலுக்குன்றி இருந்தால் அதிகாலையில் சூரியனை வழிபடுவதும், குரு வலுவின்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபடுவதும் நல்ல பலனை தரும்.

ரிஷபம்

rishabamரிஷப லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே அழகான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். அதோடு இறக்க குணமும் மற்றவர்களை புரிந்துகொள்ளும் தன்மையும் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் சுக்கிரன்.

- Advertisement -

பரிகாரம்:

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் வலுவின்றி இருந்தால் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம். புதன் வலுவின்றி இருந்தால் புதன் கிழமைகளில் விஷ்ணுவை வழிபடலாம். சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுவதன் மூலம் பலன்களை பெறலாம்.

மிதுனம்

midhunamமிதுன லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்வார்கள்.இவர்கள் சுருருப்பாகவும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள். அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் குணம் இவர்களிடம் இருக்கும். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் புதன்.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் வலுவின்றி இருந்தால் ஹயக்ரீவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். சுக்கிரன் வலுவின்றி இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பலன்களை பெறலாம். சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுவதன் மூலம் பலன்களை பெறலாம்.

கடகம்

kadagamகடக லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே தான் செய்ய நினைப்பதை எப்படியாவது செய்து முடிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அறிவாளிகளாகவும் ஆடல் பாடல் போன்ற கலைகளில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் சந்திரன்.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சந்திரன் வலுவின்றி இருந்தால் திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். செவ்வாய் வலுவின்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

சிம்மம்
simmam

 

சிம்ம லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே சற்று முன்கோபம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாருக்கும் அவ்வளவு எளிதில் கட்டுப்பட மாட்டார்கள். தன்னுடைய சொந்த காலில் எப்போதும் நிற்கவேண்டும் என்ற எண்ணம் உடைய இவர்கள், நேர்மையாகவும் மற்றவர்களிடம் பெருந்தன்மையாகவும் நடந்துகொள்ளும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் சூரியன்.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சூரியன் வலுவின்றி இருந்தால் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். செவ்வாய் வலுவின்றி இருந்தால், செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டுவருவதாலும், சஷ்டி அன்று விரதமிருந்து முருகனை வழிபட்டாலும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

kanniகன்னி லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாக தங்களை அறிவு சார்ந்த பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவார்கள். மற்றவர்களை எளிதாக கவரக்கூடிய குணம் உள்ள இவர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் புதன்.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் வலுவின்றி இருந்தால் புதன் கிழமையன்று திருவெண்காடு சென்று புதபகவானை தரிசிப்பதன் பலனாக பல நன்மைகளை பெறலாம். சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுவதன் மூலம் பலன்களை பெறலாம்

துலாம்

thulamதுலாம் லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே வாழ்வில் உயந்த நிலைக்கு செல்லவேண்டும் என்ற மன உறுதியும் லட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எத்தகைய பிரச்சனை வந்தாலும் அதை நீதி தவறாமல் சமாளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நிர்வாக திறமை இவர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் சுக்கிரன்.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் வலுவின்றி இருந்தால் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம். புதன் வலுவின்றி இருந்தால் புதன் கிழமைகளில் விஷ்ணுவை வழிபடலாம். அதோடு திருவெண்காடு சென்று புதபகவானை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

virichigam

விருச்சிக லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சற்று பிடிவாத குணம் கொண்ட இவர்கள் தன் வேலையில் கெட்டிக்கார தனத்தோடு செயல்படுவார்கள். ஒரு வேலையை தொடங்கினாள் அதை முடித்தே தீர வேண்டும் என்று கடைசிவரை போராடுவார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் செவ்வாய்.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான செவ்வாய் வலுவின்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். குரு வலுக்குன்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபடுவதும் நல்ல பலனை தரும். அதோடு ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.

தனுசு

dhanusu

தனுசு லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே அனைவரிடத்திலும் கனிவோடு நடந்துகொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒழுக்கமுடையவர்களாகவும் தேவ பக்தி கொண்டவர்களாகவும் விளங்கும் இவர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் குரு.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான குரு வலுவின்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபடுவதும் நல்ல பலனை தரும். செவ்வாய் வலுவின்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

மகரம்

magaramமகர லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே நல்ல சாதுர்யமாக பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்வில் முன்னேற்றம் அடைய பல திட்டங்களை வகுத்து அதன்படி நடந்து வெற்றி காண்பர். அனைவரிடத்திலும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் அற்புத குணம் இவர்களிடம் இருக்கும். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் சனி.

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சனி வலுவின்றி இருந்தால் திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசித்து வந்தால் நல்ல பலன்களை பெறலாம். சுக்கிரன் வலுவின்றி இருந்தால் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம். புதன் வலுவின்றி இருந்தால் ஹயக்ரீவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

கும்பம்

kumbamகும்ப லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கும். செல்வம் செல்வாக்கும் உயர் பதவிகளும் இவர்களை தானாக தேடி வெறும். இவர்கள் பல நேரங்களில் தற்பெருமையை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் சனி.

பரிகாரம் 

ந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சனி வலுவின்றி இருந்தால் திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசித்து வந்தால் நல்ல பலன்களை பெறலாம். சுக்கிரன் வலுவின்றி இருந்தால் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம்.

மீனம்

meenamமீன லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாக எப்போதும் மலர்ந்த முகத்தோடு காணப்படுவார்கள். இவர்களிடம் இருந்து எந்த ரகசியத்தையும் அவ்வளவு எளிதில் பெற முடியாது. அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர்களுக்கு சற்று முன்கோபம் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் குரு

பரிகாரம் 

இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான குரு வலுக்குன்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபடுவதும் நல்ல பலனை தரும். அதோடு ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும். செவ்வாய் வலுவின்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.