குரு பெயர்ச்சியான இன்று எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கோவிலுக்கு செல்ல வேண்டும் ?

guru
- Advertisement -

நவகிரங்களில் மிகவும் முக்கிய  கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷமும் குரு பார்த்தல் விலகி செல்லும் என்பது ஜோதிட ரீதியான உண்மை. இப்படி பல சிறப்புக்கள் மிக்க குரு பகவான் 04-10-2018 அன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த நாளில் எந்தெந்த ராசிக்காரர்கள் நிச்சயம் கோவிலுக்கு செல்ல வேண்டும்?. குரு பகவானுக்குரிய சிறப்பு கோவில்கள் எங்கெங்கு உள்ளது? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

guru

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் கடகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தர உள்ளார் குருபகவான். ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு ஓரளவிற்கு இந்த குரு பெயர்ச்சியின் மூலம் பலன்கள் உண்டு. மேஷம், மிதுனம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு பெரிதாக பலன்கள் இல்லை.

- Advertisement -
ராசிமதிப்பெண்
மேஷம்60/100
ரிஷபம்75/100
மிதுனம்60/100
கடகம்90/100
சிம்மம்65/100
கன்னி65/100
துலாம்75/100
விருச்சிகம்65/100
தனுசு60/100
மகரம்80/100
கும்பம்70/100
மீனம்90/100

குரு பெயர்ச்சியான இன்று மேஷம், மிதுனம், தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்களும் கட்டாயம் கோயிலிற்கு சென்று குரு பகவானை வழிபடுவது சிறந்தது.

முக்கிய குரு தலங்கள்:
குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது திருச்செந்தூர் முருகன் கோவில். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாகக் கருதப்படும் இங்கு தான் அசுரர்களை பற்றியும், அவர்களது குணத்தை பற்றியும் குரு பகவான் முருகனுக்கு எடுத்து கூறினார். இங்குள்ள முருகப்பெருமானையும் குரு பகவானையும் தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

- Advertisement -

Tiruchendur

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற குரு தலம். இங்கு மூலவரே தட்சிணாமூர்த்தி தான்.குரு பெயர்ச்சியான இன்று இங்கு சென்று வழிபடுவதால் நல்ல பலன்கள் உண்டு.

நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரி கோவிலாக விளங்குகிறது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். மேலும் தென்குடித்திட்டை,குருவித்துறை,பாடி திருவலிதாயம்,பட்டமங்கலம்,முறப்பநாடு,அகரம் கோவிந்தவாடி என பல முக்கிய குரு தலங்கள் உள்ளன. இங்குள்ள குரு பகவானை இன்று வழிபடுவது சிறந்தது

guru

குரு பகவானுக்கு தனி சன்னிதியுடைய கோயிலிற்கு இன்று செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று நவகிரக சன்னதியில் உள்ள குருபகவானை வழிபடலாம்

- Advertisement -