உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்கினால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா

rasi chart

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆகையால் அந்த கிரகத்தின் அதிகபதியாக விளங்கும் கடவுளை ஒருவர் வணங்குவதன் மூலம் பலவித அதிஷ்டங்கள் அவர்களது வாழ்வில் வந்து சேரும் என்பது ஜோதிட ரீதியாக கூறப்படும் கருத்து.

மேஷம்
Mesham

மேஷ ராசியை ஆளும் கிரகமான செய்வாயின் பலத்தை அதிகரிக்க, மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்கினால் சிறந்த பலன் உண்டு.

ரிஷபம்
Rishabam

ரிஷப ராசியை ஆளும் கிரகமான சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

மிதுனம்
Midhunam

- Advertisement -

மிதுன ராசியை ஆளும் கிரகமான புதனின் பலத்தை அதிகரிக்க, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.

கடகம்
kadagam

கடக ராசியை ஆளும் கிரகமான சந்திரனின் பலத்தை அதிகரிக்க, கடக ராசிக்காரர்கள் கௌரி அம்மனை வணங்கினால் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

சிம்மம்
Simmam

சிம்ம ராசியை ஆளும் கிரகமான சூரியனின் பலத்தை அதிகரிக்க, சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

கன்னி
Kanni

கன்னி ராசியை ஆளும் கிரகமான புதனின் பலத்தை அதிகரிக்க, கன்னி ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.

துலாம்
Thulam

துலாம் ராசியை ஆளும் கிரகமான சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, துலாம் ராசிக்காரர்கள் லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருகும்.

விருச்சிகம்
Viruchigam

விருச்சிக ராசியை ஆளும் கிரகமான செவ்வாயின் பலத்தை அதிகரிக்க, விருச்சிக ராசிக்காரர்கள் சிவனை வணங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்.

தனுசு
Dhanusu

தனுசு ராசியை ஆளும் கிரகமான குருவின் பலத்தை அதிகரிக்க, தனுசு ராசிக்காரர்கள் சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.

மகரம்
Magaram

மகர ராசியை ஆளும் கிரகமான சனியின் பலத்தை அதிகரிக்க, மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.

கும்பம்
Kumbam

கும்ப ராசியை ஆளும் கிரகமான சனியின் பலத்தை அதிகரிக்க, கும்ப ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் எதிலும் நன்மை கிட்டும்.

மீனம்
Meenam

மீன ராசியை ஆளும் கிரகமான குருவின் பலத்தை அதிகரிக்க, மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

பொதுவான இந்த ராசி பலன் மூலம் உங்கள் ராசிக்கான நல்ல தகவலை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம்.