எந்த ராசிக்காரர்கள் யாரோடெல்லாம் ஒத்துப்போவார்கள் தெரியுமா ?

astrology

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் பொருந்தும் ராசி பொருந்தாத ராசி என்று சில இருக்கிறது. அந்த வகையில் எந்த ராசிகாரர்களுக்கு எந்த ராசிக்காரரோடு ஒத்துப்போகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
meshamமேஷ ராசிக்காரர்கள் எப்போதும் இலட்சியத்தை நோக்கி ஓடுபவர்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்கள் தங்கள் வேலையை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பர். சில நேரங்களில் இவர்களின் அன்பை நாடிவரும் பலரை இவர்கள் புறக்கணிக்கவும் செய்வர். எப்போதும் அமைதியாக யோசிக்கும் இவர்களுக்கு, மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

ரிஷபம்
rishabamரிஷப ராசிகாரர்களுக்கு எப்போதும் கணக்கு சரியாக இருக்க வேண்டும். பழைய சித்தாந்தங்களில் இவர்களுக்கு அதிகம் நம்பிக்கை இருக்கும். தாங்கள் செய்யும் அனைத்து செலவுகளுக்கும் இவர்களிடம் கணக்கு கச்சிதமாக இருக்கும். வீட்டை விட்டு வெகுதூரம் செல்வதற்கு பெரும்பாலான நேரங்களில் இவர்களுக்கு விருப்பம் இருக்காது. ரிஷபம், கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

மிதுனம்
midhunamஎப்போதும் தன்மானதோடு வாழ நினைக்கும் மிதுன ராசிக்கார்கள் தன்னுடைய சுய புத்தியின் மூலம் முன்னேற நினைப்பவர்கள். பொதுவாக இவர்களுக்கு வழக்கை துணையாலோ அல்லது வேலையாலோ போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். துலாம், மேஷம், சிம்மம் மற்றும் கும்பம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

கடகம்
kadagamகடக ராசிகாரர்களுக்கு காதல் உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். இவர்கள் தங்களின் துணைக்கு ஏதாவதுவது ஒன்று என்றால் துடித்து போவார்கள். ஆனால் சில நேரங்களில் இவர்களின் வழக்கை துணையே இவர்களை தூக்கி எரிந்து பேசுவார்கள். எவ்வளவு பெரிய சண்டை வந்தாலும் இவர்கள் தங்கள் வாழ்க்கை துணையோடு சேர்ந்துவிடுவார்கள். ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

சிம்மம்
simmamசிம்ம ராசிக்கார்கள் எப்போதும் தங்கள் மீது புகழின் வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். தங்களது இலட்சியத்தை அடைவதில் இவர்கள் வல்லவர்கள். ஏதாவது ஒரு வழியில் இலட்சியத்தை அடைந்தே தீருவார்கள். தங்களின் மனம் கவர்ந்தவர்வருக்கு அன்பை அல்லி தருவார்கள். துலாம், மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

- Advertisement -

கன்னி
kanniகன்னி ரசிகர்கள் வசீகரமாக இருப்பார்கள் இதனாலே இவர்களை நிறைய பேருக்கு பிடிக்கும். இவள்கள் எப்போதும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ள விரும்புவார்கள். ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

துலாம்
thulamதுலாம் ராசிக்கார்கள் எப்போதும் நடுநிலையாக இருக்க நினைப்பவர்கள். இவர்கள் தங்களின் உறவிற்காக அனைத்து தியாகங்களையும் செய்வார்கள். அதே சமயத்தில் தன் துணையோடு அவ்வவ்போது கோபித்துக்கொள்வார்கள். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இவர்களை மிஞ்ச ஆளே இல்லை. மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

விருச்சிகம்
virichigamவிருச்சிக ராசிக்கார்கள் எதையும் உணர்வு பூர்வமாக அணுகுவார்கள். இவர்களின் மனதில் இருப்பதை அறிவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆன்மீகத்தில் இவர்களுக்கு நாட்டம் அதிகமாக இருக்கும். கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

தனுசு
dhanusuதனுசு ராசிக்கார்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க எண்ணுபவர்கள். மற்றவர்கள் இவர்களை கட்டுப்படுத்துவதை இவர்கள் எப்போதும் விரும்பமாட்டார்கள். இவர்கள் தன் துணையின் நல்ல குணங்களை மட்டுமே பார்ப்பார்கள். மேஷம், துலாம், சிம்மம் மற்றும் கும்பம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

மகரம்
magaramமகர ராசிக்காரர்கள் எப்போதும் உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரிடத்திலும் அதிகம் அன்பு செலுத்துபவர்களாக இருப்பார்கள். ஒருமுறை அன்பு செலுத்தாவிட்டால் அது கடைசி வரை நீடிக்கும். அதே போல தனுக்கு வரும் துணையும் இவர்கள் மீது எப்போதும் அன்பாய் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இவர்கள். ரிஷபம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

கும்பம்
kumbamகும்பராசிக்கார்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் அதை வெளிப்படுத்த எப்போதும் ஒரு தூண்டுகோல் இவர்களுக்கு தேவைப் படும். பொய் பித்தலாட்டம் போற்றவற்றை செய்ய கூடாது என்று நினைப்பவர்கள் இவர்கள். மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

மீனம்
meenamமீனா ராசிக்கார்கள் அடுத்தவர்களுக்கு அன்பை அல்லி தருவார்கள். ஆனால் இவர்கள் சுலபத்தில் காயப்பட்டுவிடுவார்கள். அதே சமயம் இவர்களை கோவப்படுத்துவது மிக எளிது. ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசியுள்ள நபர்களோடு இவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போகும்.

இது பொதுவான ராசி பலன் தான். அவரவர் ஜாதகத்தை பொறுத்து இதில் சில மாறுதல்கள் இருக்கலாம்.