இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் மனைவி சொல் தான் மந்திரமாம்? அது உண்மையா? பொய்யா?

couple-astro

திருமண பந்தம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆயிரம் காலத்துப் பயிர் என்பது எந்த அளவிற்கு உண்மை என்று வாழ்ந்து தான் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய வீட்டிலும் பெரும்பாலும் பெண்கள் தான் ஆட்சியாளராக இருந்து வருகிறார்கள். ஓரிரு வீடுகளில் இதற்கு நேர்மாறாக ஆண்களும் ஆட்சி புரிகின்றனர். பெண்கள் ஆட்சி செய்யும் வீடுகள் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான முறையில் சென்று கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இந்த 4 ராசிக்காரர்கள் தங்களுடைய மனைவி சொல்லே மந்திரம் எனும் அளவிற்கு நடந்து கொள்வார்களாம் அது உண்மையா? பொய்யா? படித்து பார்த்து நீங்களே சொல்லுங்கள்.

சிம்மம்:
simmam-rasi
முதலாவதாக சிம்ம ராசிக்காரர்கள் மனைவிக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர்களாக இருப்பார்களாம். மற்றவர்களிடத்தில் சிடுசிடுவென முகத்தை காட்டும் இவர்கள் மனைவியிடம் மட்டும் அன்பைப் பொழிவார்களாம். அடிக்கடி இவர்களுக்குள் ஊடல்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து பேசுவதில்லை. ‘என் மனைவி சொன்னா! அது சரியாகத் தான் இருக்கும்’ என்று ‘ஆமாம் சாமி’ போடுவார்கள். இது எந்த அளவிற்கு உண்மை? என்பதை சிம்ம ராசிக்காரர்கள் தான் கூற வேண்டும்.

மகரம்:
magaram-rasi
அடுத்ததாக மகர ராசிக்காரர்களின் நிலைமையும் கிட்டத்தட்ட இப்படித்தான். சனி பகவானின் ஆட்சி வீடான மகர ராசியில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு முன்பு வரை கெத்தாக பேசிக் கொண்டிருந்தாலும், திருமணத்திற்குப் பின்பு இவர்களுடைய அணுகுமுறை அப்படியே தலைகீழாக மாறி விடுகிறதாம். இயல்பாகவே குடும்ப பொறுப்புகளை சுமக்கும் மகர ராசிக்காரர்கள் மனைவிக்கு மரியாதை கொடுப்பதிலும் வல்லவர்கள் தான். தன்னுடைய மனைவி இடத்தில் எந்த ஒரு ரகசியத்தையும் இவர்கள் மறைத்து வைப்பதில்லை. இவர்களுடைய வெளிப்பாடான குணம் மனைவிமார்களை தன்பால் ஈர்த்துக் கொள்ள உதவுகிறது என்று கூறப்படுகிறது. என்ன மகர ராசிக்காரர்களே உண்மை தானா?

கும்பம்:
kumbam-rasi
கும்ப ராசிக்காரர்கள் மனைவி சொல் தட்டாதவர்கள். அவர்கள் என்ன சொன்னாலும் வேதவாக்காக நினைத்து செயல்படுவார்கள். அடிக்கடி எலியும், பூனையுமாக திரியும் இவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் ரோமியோ ஜூலியட் போல் நடந்து கொள்வார்களாம். கும்ப ராசிக்காரர்கள் திருமணத்தின் மீதான மரியாதை மற்ற ராசிக்காரர்களை விட அதிகமாக வைத்திருப்பார்கள். என்ன தான் அடித்துக் கொண்டாலும் ஒருவருடன் ஒருவர் நேரம் செலவிடுவதை அதிகமாக விரும்புவார்களாம். அப்படியா கும்ப ராசிக்காரர்களே?

மீனம்:
meenam-rasi
மீன ராசிக்காரர்கள் மனைவி மேல் வைத்திருக்கும் அன்பு மற்றவர்கள் வியக்கும் வண்ணம் இருக்குமாம். அனைவரையும் அனுசரித்து செல்லும் திறமை மீன ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இருக்குமாம். அப்படி இருக்கும் பொழுது தங்களுடைய மனைவிமார்களை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? மற்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில் மீன ராசிக்காரர்களுக்கு இணை வேறு யாருமே இல்லையாம். ஒருவருடன் ஒருவர் அதிகம் பேசாவிட்டாலும் மனதிற்குள் மினி தாஜ்மஹாலே கட்டி வைத்திருப்பார்ககளாம். நீங்க ரொம்ப நல்லவங்க தான்.

marraige-couple

இந்த நான்கு ராசிக்காரர்கள் பட்டியலில் மற்ற ராசிக்காரர்கள் இல்லை என்று நினைக்க வேண்டாம். அவர் அவர்களுக்கு வரும் துணையைப் பொறுத்தே மனைவி சொல்லே மந்திரம் ஆக்குவதும், அதை தந்திரமாக கையாள்வதும் அமைந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும் மனைவி சொல்லை கேட்காவிட்டால் தட்டில் சோறு கிடைக்காது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்ன சரி தானே?

இதையும் படிக்கலாமே
சனியுடன் கூடி நீசம் பெறும் குரு பகவான்! வருகின்ற குரு பெயர்ச்சியின் பொழுது 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.