உங்கள் ராசிப்படி எது உங்களுக்கு அதிஷ்டத்தை தரும் தெரியுமா?

astrology

ஜாதக ரீதியாக ஒருவரது ராசிப்படி என்ன செய்தால் அவர்களுக்கு அதிஷ்டம் வந்து சேரும் என்று கூற முடியும். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த நவரத்தினக்கல்லை அணிந்தால் அவர்களுக்கு செல்வம் புகழ் என அனைத்தும் வந்து சேரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
Mesham
மேஷ ராசிக்கார்கள் பவளம் அணிவது சிறந்ததாகும். இதனால் இவர்களுக்கு கோபம் தணியும் அதோடு அதிஷ்டமும் கூடும். வீட்டில் தெய்வ கடாட்சம் கிடைப்பதோடு .

ரிஷபம்
Rishabam
ரிஷப ராசிக்கார்கள் வைரம் அணிவது சிறந்ததாகும். இது இவர்களுக்கு மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம்
Midhunam
மிதுன ராசிக்கார்கள் மரகதம் அணிவது சிறந்ததாகும். இதனால் இவர்களுக்கு அதிஷ்டம் பெருகுவதோடு செய்யும் தொழில் விருத்தியாகும்.

கடகம்
kadagam
கடக ராசிக்கார்கள் முத்து அணிவது சிறந்ததாகும். இதனால் இவர்களுக்கு செல்வம் பெருகும் அதோடு மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

சிம்மம்
Simmam
சிம்ம ராசிக்கார்கள் மாணிக்கம் அணிவது சிறந்ததாகும். இதனால் இவர்கள் மிக பெரிய அதிஷ்டசாலியாக மாறலாம்.

- Advertisement -

கன்னி
Kanni
கன்னி ராசிக்கார்கள் மரகதம் அணிவது சிறந்ததாகும். இதனால் இவர்கள் செய்யும் தொழில் விருத்தியடையும். அதோடு அதிஷ்டம் கூடும்.

துலாம்
Thulam
துலாம் ராசிக்கார்கள் வைரம் அணிவது சிறந்ததாகும். இது இவர்களுக்கு மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம்
Viruchigam
விருச்சிக ராசிக்கார்கள் பவளம் அணிவது சிறந்ததாகும். இதனால் வீட்டில் தெய்வ கடாச்சம் பெருகும். அதோடு கோபம் குறைந்து அதிஷ்டம் பெருகும்.

தனுசு
Dhanusu
தனுசு ராசிக்கார்கள் கனக புஷ்ப ராகம் அணிவது சிறந்ததாகும். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

மகரம்
Magaram
மகர ராசிக்கார்கள் நீலக்கல்(Blue Shappire) அணிவது சிறந்ததாகும். இதனால் இவர்களுக்கும் செல்வாக்கு உயரும், செல்வம் பெருகும், தெய்வ கடாச்சம் வீசும்

கும்பம்
Kumbam
கும்ப ராசிக்கார்கள் நீலக்கல்(Blue Shappire) அணிவது சிறந்ததாகும். இதனால் இவர்களுக்கும் செல்வாக்கு உயரும், செல்வம் பெருகும், தெய்வ கடாச்சம் வீசும்

மீனம்
Meenam
மீன ராசிக்கார்கள் கனக புஷ்ப ராகம் அணிவது சிறந்ததாகும். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.