இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள வைட் குருமா 10 நிமிடத்தில் எப்படி வீட்டில் செய்வது? மசாலா சேர்க்காத அருமையான வெள்ளை குருமா சுலபமாக இப்படியும் செய்யலாமே!

chathi kuruma
- Advertisement -

இட்லி, சப்பாத்தி, பூரி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பராக இருக்கக்கூடிய இந்த மசாலா சேர்க்காத வெள்ளை குருமா எப்படி வீட்டில் எளிதாக தயாரிக்கப் போகிறோம்? குருமா என்றாலே மசாலா சேர்த்து செய்வது தானே வழக்கம். ஆனால் இந்த குருமாவுக்கு எந்த மசாலாவும் நாம் சேர்க்கப் போவதில்லை. ரொம்பவே சுலபமாக 10 நிமிடத்தில் தயாரித்து விடக்கூடிய இந்த வெள்ளை குருமா ரெசிபி எப்படி செய்யலாம்? என்பதை இனி இப்பதிவில் பார்ப்போம்.

வைட் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, சோம்பு – அரை ஸ்பூன், பூண்டு பல் – 5, இஞ்சி – இரண்டு இன்ச், பொட்டுக்கடலை – இரண்டு ஸ்பூன், முந்திரிப் பருப்பு – ஐந்து, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், தாளிக்க: சோம்பு – கால் ஸ்பூன், பட்டை – ஒன்று, பிரிஞ்சி இலை – 2, ஏலக்காய் – ஒன்று, வெங்காயம் – 1, கருவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – 2, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

வைட் குருமா செய்முறை விளக்கம்:
இந்த வெள்ளை குருமா செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் ரெண்டு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கும் பொழுது உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் மற்றும் வாசனைக்கு சோம்பு சேர்த்து வதக்குங்கள்.

இவை நன்கு வதங்கி வரும் பொழுது தோல் உரித்த பூண்டு மற்றும் தோல் நீக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் இவற்றை பிரட்டி விட்டு பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் கடைசியாக நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு உலர வறுக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய பொருட்களை சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் போல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் ஆகியவற்றை தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வதக்குங்கள்.

இதையும் படிக்கலாமே:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த இதைவிட சுவையா, சுலபமா ஒரு தோசையை யாராலும் செய்ய முடியாது.

வெங்காயம் வதங்கி வரும் பொழுது ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்க வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மசிய வதங்கியதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்க்க வேண்டும். இப்போது லோ ஃபிளேமில் வைத்துக் கொள்ளுங்கள். குருமா கொதித்து கெட்டியானதும், நறுக்கிய மல்லி தழை தூவி சுடச்சுட இட்லி, தோசை சப்பாத்தி, பூரி என்று பரிமாற வேண்டியதுதான். ரொம்பவே ருசியாக இருக்கக் கூடிய இந்த மசாலா சேர்க்காத வெள்ளை குருமா இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -