மொட்டை அடிக்கும் பழக்கம் முதன் முதலில் எப்படி உருவானது தெரியுமா ?

mottai
- Advertisement -

இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முடி காணிக்கை செலுத்துவதால், நம்முடைய அகந்தை அகன்று, அடக்கம் பிறக்கிறது. தங்களுடைய இஷ்ட தெய்வத்துக்கு இப்படி காணிக்கை செலுத்துவதால், தங்கள் மனதில் உள்ள பாரமெல்லாம் இறங்கிவிடுவதாக பக்தர்கள் மனப்பூர்வமாக நம்புகின்றனர். முதன்முதலில் முடி காணிக்கை செலுத்தியது யார்? எதற்காக என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

mottai

 

- Advertisement -

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் சோழ தேசத்தின் தளபதியாகப் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் மானக்கஞ்சாறர் என்னும் சிவ பக்தரும் வாழ்ந்து வந்தார். அவருடைய மகளைத் திருமணம் செய்ய விரும்பினார் ஏயர்கோன் கலிக்காமர். திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணநாளும் வந்தது.

அன்று மானக்கஞ்சாறர் வீட்டுக்கு ஒரு சிவனடியார் வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்து கொண்டார். மானக்கஞ்சாறர், மணப்பெண்ணாகிய தன் மகளை சிவனடியாரின் காலில் விழுந்து ஆசிபெறுமாறு கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

mottai

மணப்பெண்ணும் சிவனடியார் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது அப்பெண்ணின் நீண்ட கூந்தலை நோட்டமிட்ட சிவனடியார் “பஞ்சவடி செய்ய எனக்கு இந்த கூந்தல் தேவைப்படுகிறது கிடைக்குமா?” என்று கேட்டார். அதீத சிவ பக்தரான மானக்கஞ்சாறரும் மணநாள் என்றும் பாராமல் மகளின் சம்மதத்துடன் அறுத்துக் கொடுத்துவிட்டார். அந்த நேரம் சரியாக , மணமகனும் அங்கு வந்தார்.

mottai

கூந்தல் இல்லாமல் குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். சிவனடியாருக்காகவும் பெற்றோரின் வார்த்தைக்காகவும் பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாக நினைக்கும் கூந்தலையே தியாகம் செய்தவள். இவளைவிட சிறந்த பெண் எனக்கு எங்கு சென்றாலும் கிடைக்க வாய்ப்பில்லை’ என்று மகிச்சியுடன் கூறினார் . திருமணம் சிறப்பாக முடிந்தது. இதில் இருந்துதான் முடியைக் காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

- Advertisement -