எந்தெந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்? இதற்கான விதிமுறைகள் என்னவாக இருக்கலாம்? வெளியான தகவல்

kudumba thalaivi
- Advertisement -

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வாக்குகளை சேகரித்தனர். அதில் மிக முக்கியமான வாக்குறுதியாக கருதப்பட்டது திமுகவின் வாக்குறுதியான “மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்” என்பதாகும். திமுக ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு மகளிருக்கான இலவச பஸ் வசதி, மக்களை தேடி மருத்துவம் இப்படி பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியது.

ஆனாலும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்பது இன்றுவரை நிறைவேற்றாத ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட 85% பணிகள் முடிவுற்றதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்டபோது திமுக அரசு 85% வாக்குறித்துகளை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டதாகவும், குடும்ப தலைவிக்கான 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் எனவும், அதே சமயம் மீதம் உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் கூறி இருந்தார்.

stalin

இந்த நிலையில், யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும் என்ற தகவல் தற்போது கசிய துவங்கி உள்ளது. அதாவது PHH மற்றும் PHAAY குடும்ப அட்டை தாரர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் எனவும், அதிலும் குடும்ப தலைவரின் ஆண்டு வருமானம் மற்றும் வயது வரம்பு போன்றவை கருத்தில் கொண்டே இந்த சலுகை கிடைக்கும் எனவும், அரசு பணிகளில் இருப்பவர்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனடையும் கல்லூரி பெண்களின் குடும்பத்திற்கும் இந்த 1000 ரூபாய் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மற்றொரு தகவலாக புதுமைப்பெண் திட்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை, அது மாணவிகளுக்கானது இது குடும்பத்தலைவிகளுக்கானது ஆகையால் ஒரு குடும்பத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவி பயனடைந்து வந்தாலும் அதே குடும்பத்தின் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை.

இதையும் படிக்கலாமே: பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமெனில், செவ்வாய்க்கிழமையில் இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

அரசின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியான பின்பு தெளிவான விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மறைந்த முன்னாள் முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று இந்த திட்டம் துவங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -