தாசியின் பக்தியும் முனிவரின் பக்தியும் – குட்டி கதை

munivarl
- Advertisement -

அழகிய கிராமம் ஒன்று இருந்தது. அதில் ஒரே தெருவில் மிக அருகாமையில் ஒரு முனிவரின் வீடும் தாசியின் வீடும் இருந்தது. முனிவரை காண எப்போதும் யாரவது வந்துகொண்டே இருந்தனர். அதே போல தாசியின் வீட்டிற்கும் ஆண்கள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருந்தனர்.

village

தாசியின் வீட்டை கடந்து முனிவரை காண வரும் நிலை உள்ளதால் சிலருக்கு அது சங்கடமாக இருந்தது. இதை அறிந்த முனிவர் ஒருநாள் அந்த தாசியை அழைத்து நீ இந்த தொழிலை விட்டு வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள். உன்னால் என்னை காண வருபவர்களுக்கு சங்கடம் நேருகிறது. அதோடு நீ செய்யும் தொழிலால் உனக்கு தினம் தினம் பாவமே வந்து சேரும் என்றார்.

- Advertisement -

இதை கேட்ட அந்த தாசி கதறி அழுதாள். எனக்கு மட்டும் ஆசையா சுவாமி. நான் இந்த தொழிலை விடுத்து வேறு தொழில் செய்யத்தான் நினைக்கிறேன் ஆனால் இந்த சமுதாயம் என்னை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வீட்டில் பாத்திரம் தேய்க்கும் வேலைக்கு கூட என்னை யாரும் சேர்த்துக்கொள்வதில்லை. என்னால் அவர்களின் குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று எண்ணி எல்லோரும் என்னை தவிர்க்கிறார்கள் என்றாள். அதெல்லாம் எனக்கு தெரியாது நீ வேறு தொழிலை தேடிக்கொள்ளத்தான் வேண்டும் என்று கூறிவிட்டு அந்த முனிவர் சென்றார்.

munivar

தாசியும் முனிவரின் சொல்படி கேட்கவேண்டும் என்று எண்ணி அவள் தன் தொழிலை விட முயன்றால். வேலை தேடினால் ஆனால் யாரும் அவளுக்கு வேலை தரவில்லை. அவள் தன் நிலையை இறைவனிடம் சொல்லி அழுதாள். பசி அவளை வாட்டி எடுத்தது. இருந்தாலும் அவள் அந்த தொழிலை செய்ய விரும்பவில்லை. ஆனால் அந்த ஊரில் உள்ள சில கொடியவர்கள் அவளை விடுவதாக இல்லை. வலுக்கட்டாயமாக அவளை அடைந்தனர்.

- Advertisement -

dhasi

ஒரு கட்டத்தில் வேறு வழி இன்றி மீண்டும் தன் தொழிலை அவள் ஆரமித்தால். முனிவரின் வீட்டிலும் தாசியின் வீட்டிலும் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. தாசி தன் தொழிலை மீண்டும் தொடங்கிவிட்டால் என்ற செய்தி அறிந்து முனிவர் மிகுந்த சினம் கொண்டார். தினமும் அவள் வீட்டிற்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை அறிந்து அதே எண்ணிக்கையில் சிறு கற்களை ஒரு இடத்தில் அவர் போட்டார். தினமும் இப்படியே அவர் கற்களை போட்டுக்கொண்டே வந்தார்.

சில நாட்கள் கழித்து அந்த தாசியை அழைத்து அந்த கற்குவியலை காட்டினார். பார் இந்த 100 நாட்களில் நீ செய்த பாவங்களின் குவியல் இது. உன் வாழ்நாளில் நீ செய்த பாவம் இதை விட பன்மடங்கு அதிகம் என்றார். இதை கேட்டு அந்த தாசியின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. இறைவா என்னை மட்டும் ஏன் இப்படி வஞ்சிக்கிறாய் என்று அழுதாள். அன்று இரவு அவள் இறைவனிடம் வேண்டி அழுதாள். தற்கொலை செய்துகொள்வது பாவம் என்கிறார்கள் இல்லையேல் அதை செய்துகொள்வேன். தயவு செய்து என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இறைவனிடம் கதறினாள்.

- Advertisement -

sivan

இறைவனின் செவிகளில் அவள் கதறல் கேட்டதோ என்னவோ அன்று இரவு அவள் இறந்துவிடுகிறாள். அதே இரவில் அந்த முனிவரும் இறக்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூடி தாசியின் உடலை ஊருக்கு அப்பால் உள்ள காட்டில் வீசி விடுகின்றனர். நாய்க்கும் நெறிக்கும் அவளின் உடல் இறையாகிறது. முனிவரின் உடலை ராஜ மரியாதையோடு அனைவரும் சேர்ந்து அடக்கம் செய்கின்றனர்.

adakkam

இருவரின் ஆன்மாவும் விண்ணுலகத்தை அடைகிறது. எம தூதர்கள் தாசியின் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டு முனிவரின் ஆன்மாவை நரகத்திற்கு அழைத்து செல்கின்றனர். முனிவரோ கதறுகிறார். இது அநியாயம், பாவம் செய்தவளுக்கு சொர்கம் எனக்கு நரகமா ? இது எப்படி சாத்தியம் என்று வினவுகிறார்.

yeman

அதற்கு அவர்கள், பூலோகத்தில் நீங்கள் இருவரும் வாழ்ந்த காலத்தில் தாசி உடலளவில் சுத்தமாக இல்லை என்றாலும் மனதளவில் அவள் யாரையும் துன்புறுத்தவில்லை அவள் எப்போதும் இறைவனை பிராத்தனை செய்துகொண்டு தான் இருந்தால். நீங்கள் உடலளவில் சுத்தமாக இருந்தாலும் மனதளவில் தாசியை வஞ்சித்துக்கொண்டே தான் இருந்தீர்கள். தாசி உடலளவில் சுத்தமாக இல்லாததால் அவளின் உடல் நாய் நரிக்கு இரையானது. நீங்கள் சுத்தமாக இருந்ததால் உங்களின் உடல் ராஜ மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் விண்ணுலகை பொறுத்தவரை மனம் தான் முக்கியம். ஆகையால் தாசி சொர்கத்திற்கு சென்றாள், உங்களுக்கு எமலோகம் என்றார்கள்.

இதையும் படிக்கலாமே:
இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் – ஒரு குட்டி கதை

ஆக ஒரு மனிதன் இறைவனை வணங்குவதற்கு உடல் சுத்தம் முக்கியம் தான் என்றாலும் அக சுத்தம் அதை விட மிக முக்கியம். உடலளவில் சுத்தமாக இருந்துகொண்டு மனதளவில் வஞ்சத்தை வைத்திருந்தால் இறைவனை வேண்டி எந்த பயனும் இல்லை.

மேலும் பல சுவாரசியமான குட்டி கதைகள்  மற்றும் சிறுகதைகளை படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.

- Advertisement -