கடவுளுக்கு வாழைப்பழம் படைப்பதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய உண்மை

murugan-3

பொதுவாக நாம் செய்யும் அனைத்து பூஜைகளிலும் கடவுளுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தவறாமல் படைப்பதுண்டு. ஏன் இதை மட்டும் நிச்சயம் படைக்கவேண்டும் என்றால் அதற்கு பின் ஒரு உண்மை ஒளிந்துள்ளது. வாருங்கள் அது பற்றி பார்ப்போம்.

god

மா, பலா, கொய்யா இப்படி எந்த பழத்தை எடுத்துக்கொண்டாலும் அது ஒரு கொட்டையில் இருந்தே முளைக்கிறது. ஒரு மனிதனோ அல்லது பறவையோ அந்த பழத்தை சாப்பிட்டு விட்டு பின் தூக்கி ஏறுகின்றனர். அதில் இருந்து செடி முளைத்து பின் கனிகள் உருவாகிறது. எப்படி பார்த்தாலும் அது மற்றவர்கள் எச்சிலில் இருந்து உருவாகிய மரம். ஆனால் வாழை என்பது அப்படி இல்லை.

எந்த வாழைமரமும் கொட்டையில் இருந்து வருவது கிடையாது. வாழைகன்றானது வாழைமரத்தின் மூலமாகவே வருகிறது. ஆகையால் வாழை பழமானது இறைவனுக்கு படைக்கும் தூய்மையான பழமாக கருதப்படுகிறது.

banana

இதே போல தேங்காயும் கொட்டையில் இருந்து முளைப்பது கிடையாது. ஒரு தேங்காயை உடைத்துப்போட்டாலும் அது முளைக்காது. தென்னை மரமானது ஒரு முழு தேங்காயில் இருந்து மட்டுமே வளரக்கூடியது.

தேங்காய்

பிறரின் எச்சில் படாமல் வளர்வதாலேயே இவைகளை நம் முன்னோர்கள் இறைவனுக்கு படைக்கும் மரபினை உருவாக்கி அதை நமக்கும் கற்பித்துள்ளர்னர்.