காசில்லாதவனுக்கு தூரத்திலும் காசுள்ளவனுக்கு அருகிலும் இறைவன் காட்சிதருவது ஏன் ?

kadavul

கோயிலிற்கு சென்றால், ஒவ்வொரு விலை மதிப்பிலான டிக்கெட்டிற்கும் ஒவ்வொரு விதமான வரிசை இருக்கும். ஒரு ஏழை பக்தன் இறைவனை தரிசிக்க 12 மணி நேரம் வரிசையில் நிற்க, பணக்கார பக்தனோ 12 நிமிடங்களில் இறைவனை தரிசித்துவிட்டு செல்கிறான்.

long queue to see god

இது எப்படி தர்மமாகும் ?, இறைவனுக்கு ஏன் இந்த பாரபட்சம்?. இதுகுறித்து ஒரு பக்தன் இறைவனின் கேள்வி கேட்க அதற்கு இறைவன் கூறிய அற்புத பதில்கள் இதோ.

இந்த கேள்வியை கேட்டதும் கலகலவென சிரித்த இறைவன்,
நான் தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் அனால் நீங்கள் என் பேச்சை நம்பவில்லை.

narasimmar

நான் கூறியது பொய் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே பிரகலநாதன் விடயத்தில் துணை பிளந்துகொண்டு நரசிம்ம அவதாரம் எடுத்து வெளியில் வந்தேன். அப்போதும் நான் எங்கும் இருக்கிறேன் என்பதை நீங்கள் நம்பவில்லை.

- Advertisement -

சரி போகட்டும், தாயிற் சிறந்தொரு கோவிலில்லை என்றேன் அதையாவது நீங்கள் கேட்டீர்களா ?. பெற்ற தாயையே பாரமாய் நினைத்து முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள்.

ஏழைகளுக்கு உதவுங்கள் அதில் இறைவனை காணலாம் என்றேன் அதையும் நீங்கள் சுத்தமாக கேட்கவில்லை.

donating food

எந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டவேண்டும், எப்போது எனக்கு பூஜை செய்ய வேண்டும், எப்போது எனக்கு திருவிழா ஏற்பாடு செய்யவேண்டும், எவ்வளவு ரூபாய் கொடுப்பவர் எவ்வளவு தூரத்தில் இருந்து என்னை வணங்கவேண்டும் இப்படி என்னை குறித்த எல்லா விடயங்களையும் நீங்களே முடிவு செய்கிறீர்கள்.

அனால் இறுதியாக பழியை தூக்கி என் மேல் போடுகிறீர்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று இறைவன் தன் பதிலை கூறினான்.

இதை கேட்டு வாயடைத்து போன பக்தன், தெய்வமே நான் கேட்டது தவறு தான், ஆளை விடுங்கள் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.