சபரி மலை ஐயப்பன் கோவிலின் நடை ஏன் தினம் தோறும் திறக்கப்படுவதில்லை தெரியுமா ?

Ayyappa
- விளம்பரம்1-

தேவர்களுக்கு தொல்லைகொடுத்த மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்த பிறகு தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறியதால் ஐயப்பன் சபரிமலைக்கு சென்று தவம் செய்ய தொடங்கினார் என்பது நாம் அறிவோம்.தவம் செய்துகொண்டிருக்கும் ஐயப்பனை தொந்தரவு செய்வதென்பது பாவச் செயலாக கருதப்படுகிறது.

iyyappan

தவத்தில் இருந்தாலும் தன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக தன் கண்களை ஐயப்பன் திறக்கத்தான் செய்கிறார். ஆரம்பகாலத்தில் மகர விளக்கு வைபவத்துக்கு மட்டுமே தன்னுடைய கண்களை திறந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வந்தார். மகர விளக்கு வைபவத்தின் போது மட்டுமே ஆதி காலத்தில் ஐயப்பன் கோவிலின் நடையும் திறக்கப்பட்டது.

- Advertisement -

வருடங்கள் பல கடந்தன, ஐயப்ப பக்தர்களும் அதிகரித்தனர். இதனால் ஐயப்பன் கோவிலை வேறு சில நாட்களிலும் திறந்தால் மட்டுமே கூட்டத்தை சமாளிக்க முடியும் என்னும் நிலை வந்தது. இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள் ஐயப்பனிடம் தேவ பிரசன்னம் கேட்டனர். அதில் வருடத்தில் ஐந்து நாட்கள் கோவிலை திறக்கலாம் என்று ஐயப்பனிடம் இருந்து உத்தரவு வந்தது.

ayyappan

மேலும் கூட்டம் பெருகியது, மீண்டும் பிரசன்னம் கெடக்கப்பட்டது அதில் 41 நாட்கள் திறக்கலாம் என்று உத்தரவு வந்தது. அதன் பின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டது. தற்போது ஐயப்பனின் உத்தரவு படி ஓவ்வொரு மாதத்திலும் ஓர் இரு நாட்கள் நடை திறக்கப்படுகிறது.

ayyappan

இதையும் படிக்கலாமே:
இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் – ஒரு குட்டி கதை

2017 – 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஐயப்பன் கோவில் திறக்கப்படுவதற்கான அட்டவணை

மாதம் பூஜை திறக்கப்படும் தேதி சார்த்தப்படும் தேதி
நவம்பர் 2017 மண்டல பூஜை மஹோத்சவம் 15-11-2017 26-12-2017
டிசம்பர் 2017 மண்டல பூஜை 26-12-2017
மகர விளக்கு மஹோத்சவம் 30-12-2017 20-01-2018
ஜனவரி 2018 மகர விளக்கு 14-01-2018

 

Advertisement