இத்தனை கடவுள்கள் இருந்தும் எதற்காக நமக்கு இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது?

corona1

எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும், முதலில் நாம் இறைவனிடம் தான் நம்முடைய பிரச்சனைகளை கூறுவோம். இப்படியிருக்க பலபேர், இன்றைய சூழ்நிலையில் ‘இத்தனை கடவுள்கள் இருந்தும் எதற்காக நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்திருக்கிறது(கொரோனா வைரஸ் சோதனை பற்றித்தான்)’ என்று மனம் நொந்து பேசுகிறார்கள். இது சரியான ஒன்றா? இந்த பூமியில் அவன் இல்லாமல் அணுவும் அசையாது என்பது தான் உண்மை. இப்படி இருக்க கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் நம்மை, இந்த அளவிற்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் ஆன்மீக ரீதியாக இதற்கு என்ன காரணமாக இருக்கும்? இறைவன் நம்மை சோதித்துப் பார்க்கிறாரா? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

corona

ராமாயண, மகாபாரத காலத்திலிருந்தே யுக, யுகங்களாக அரக்கர்களின் கோரத்தாண்டவத்தை இந்த பூமி பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. கலியுகத்தில் அரக்கர்களுக்கு வைத்த பெயர்தான் ‘வைரஸ்’. புராண காலகட்டத்தில் அரக்கர்களை அழிப்பதற்கு, தெய்வங்கள் அவதாரம் எடுத்து வந்தனர். ஆனால் கலியுகத்தில், தெய்வ ரூபத்தில் இருக்கும் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள் இப்படியாக கொரோனாவை எதிர்த்து நமக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதருமே கடவுளின் அவதாரமாக தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்தக் கொடுமையான வைரஸ் நம்மை தாக்காமல் இருப்பதற்கு, இத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களும் கடவுளுக்கு சமமானவர்கள் தானே! இந்த பூமிக்கு வைரஸை கொடுத்த அந்த ஆண்டவனே தான், வைரஸ் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நமக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றான்.

corona

மனித வாழ்க்கையில் சோதனைகள் இல்லாமல் வாழ்ந்து விட முடியாது. அந்த இறைவனே, மனித ரூபம் எடுத்து வந்தாலும் கூட, பூமியில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அதுதான் விதி. கடவுளுக்கே இப்படிப்பட்ட ஒரு சூழநிலை என்றால், கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுக்கு என்ன நிலைமை? கடவுள் நமக்கு வைத்திருக்கும் இந்த சோதனையில் இருந்து நாம் மீண்டு வேண்டும் என்றால், அந்த இறைவனின் பாதங்களை விடாமல் பற்றிக் கொள்வது மட்டும் தான் ஒரே வழி.

- Advertisement -

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். அவன் தான் இறைவன். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதானே!. ஏனென்றால் கோவிலுக்கு சென்று கூட மன அமைதியைத் தேடிக் கொள்ள முடியாத அளவிற்கு தான் இன்று நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை நெருக்கடியாக இருக்கிறது. நம்முடைய வீட்டிலேயே, நம் வீட்டு பூஜை அறையில் தினம்தோறும், காலையில் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் மூலம் அந்த இறைவனை ஆசீர்வாதத்தை நம்மால் முழுமையாகப் பெற முடியும்.

karpooram

உங்கள் வீட்டில் இருக்கும் கட்டி கற்பூரத்தைப் சிறிதளவு தூளாக்கிக் கொண்டு, வீட்டின் நான்கு மூலைகளிலும் சிறிதளவு தூவி விட்டுவிடுங்கள். கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நம்மை அண்டாது. அதுமட்டுமல்லாமல் இந்த நறுமணம், நாம் கோவிலில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி தருவது மட்டுமல்லாமல், கற்பூரத்தின் வாசத்தை நாம் சுவாசிக்கும் போது, மன அமைதியான சூழ்நிலையை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் எக்காரணத்தைக் கொண்டும் மன அழுத்தம் நமக்கு ஏற்பட கூடாது, என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே
இந்தச் செடிக்கு இத்தனை அற்புத சக்திகள் உள்ளதா? அதிர்ஷ்டத்தை அள்ளி தரக்கூடிய அந்தச் செடி எது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Coronavirus tips in Tamil. Corona prevention. Corona virus in Tamil. Coronavirus in india. Coronavirus remedy.