சிறிய மைதானம் ஸ்லோ பிட்ச் போன்றவையெல்லாம் தோல்விக்கு ஒரு காரணம் இல்லை. இதுவே தோல்விக்கு காரணம் – கேன் வில்லியம்சன்

kane

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ப்ரேஸ்வெல் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குலதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தோல்விக்கு பிறகு நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் தோல்விக்கான கருத்தினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : எங்கள் அணியின் தோல்விக்கு காரணம் சிறிய, ஸ்லோ மைதானம் போன்ற எந்த காரணமும் இல்லை. இந்த மைதானம் பெரிய இலக்கினையும் அடையக்கூடிய மைதானம் தான். ஆனால், எங்களது வீரர்கள் பொறுப்பினை உணர்ந்து ஆடவில்லை.

kuldeep

இதுபோன்ற மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் ஆனால், நாங்கள் அதனை செய்ய தவறி விட்டோம். இதுவே, தோல்விக்கு காரணம் மேலும், இந்திய அணியின் பந்துவீச்சு கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் சிறப்பாக இருந்தது என்று வில்லியம்சன் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

ஸ்டம்பிங்கில் உங்களை மிஞ்ஜ உலகில் வேறுயாருமில்லை தோனி சார். மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் – வைரல் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்