அதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்யும் விண்ட் சைம்

நமது நாட்டின் பாரம்பரிய கலையான “வாஸ்து சாஸ்திரம்” போலவே சீன நாட்டினருக்கும் பாரம்பரிய கலையாக “பெங் ஷூயி” கலை இருக்கிறது. இந்த பெங் ஷூயி கலையில் இருக்கும் சிறப்பே, நமக்கு அதிக செலவில்லாமல், அனைவரும் எளிமையாக செய்ய கூடிய சில பரிகார முறைகள் இருப்பது தான். அந்த வகையில் நமக்கு தொடர்ந்து அதிர்ஷ்டங்கள் உண்டாகவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் “விண்ட் சைம்கள்” உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

wind chime 1

உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் இப்போது நம் நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது. மக்களில் பலரும் விண்ட் சைம்களை வாங்கி தங்கள் வீடுகளில் தொங்க விட்டுக்கொள்கின்றனர். சீன வாஸ்து பரிகார முறையாக இந்த விண்ட் சைம்கள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிறு, சிறு மணிகள் கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி எழுப்பும் வகையில், இதை உபயோகப்படுத்தியிருக்கின்றனர் என்று கூற படுகிறது.

உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட விண்ட் சைம்கள் காற்றில் அசையும் போது, தொங்கிக்கொண்டிருக்கும் உலோக குழாய்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒரு விதமான ஆன்மீக சக்தி கொண்ட ஒலியை எழுப்புகிறது. இந்த ஒலிக்கு, நமது வீட்டை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் நேர்மறை அதிர்வுகளை அதிகம் பரப்பும் தன்மை கொண்டது. மேலும் இந்த ஒலிக்கு மனிதர்களின் மனதில் தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி கொண்டதாகும். வீட்டினுள் வெளிப்புற சூழல்கள் மற்றும் நபர்களால் அனுப்பப்படும் எதிர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் வர விடாமல் விரட்டும் தன்மை அதிகம் உண்டு.

Money

விண்ட் சைம்கள் தொங்க விடப்பட்டிருக்கும் வீடுகளில் துஷ்ட சக்திகள் நுழைய முடியாது. அந்த விண்ட் சைம்கள் அடிக்கடி எழுப்பும் ஒலியை கேட்பவர்களுக்கு உடல் மற்றும் மனநிலை நன்றாக இருக்கும். தொடர்ந்து பல
அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். செல்வ நிலை உயரும். அனைத்திலும் வெற்றி பெறும் நிலையையும் உண்டாக்கும். இந்த விண்ட் சைம்களை வீட்டின் தலைவாசலுக்கு மேலாக தொங்கவிடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
பணம் அதிகம் கிடைக்க செய்யும் பூஜை முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have details of Wind chimes lucky in Tamil.