பெண்களுக்கு 10 விரலில் எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது தெரியுமா?

mole-suvadi

நம் உடம்பில் குறிப்பிட்ட சில இடங்களில் இருக்கும் மச்சத்தை வைத்து பலன்கள் கூறுவது உண்டு. இதனை அங்க லட்சணம், மச்ச சாஸ்திரம் என்றெல்லாம் ஜோதிடத்தில் கூறுவது உண்டு. ஒருவருடைய அங்க அமைப்பை வைத்து அவர்கள் இப்படிப்பட்டவர்களாக தான் இருப்பார்கள் என்றும், அவர்களுடைய எதிர்காலம் இப்படிப்பட்டதாக இருக்கும் என்றும் பொதுவாக கணித்துக் கூறுவது தான் அங்க லட்சண சாஸ்திரம்.

mole in finger

அது போலவே ஒருவருடைய அங்கத்தில் இருக்கும் குறிப்பிட்ட மச்சத்தை வைத்தும் பலன்கள் கூறுவது உண்டு. ஒவ்வொருவருக்கும் உடம்பில் ஒவ்வொரு இடங்களில் கருப்பாக புள்ளி போன்ற அமைப்பில் இருப்பது மச்சம் எனப்படுகிறது. இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதிகளில் வெவ்வேறு விதமாக அமைந்திருப்பதால் இதற்கு பல்வேறு பலன்களும் கூறப்படுகின்றன.

சிலருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கும் இந்த மச்சம், பலருக்கு திடீரென இடையிலும் தோன்றும். ஆனால் ஒரு முறை தோன்றியது எப்பொழுதும் மீண்டும் மறைவது இல்லை. இந்த வகையில் பெண்களுடைய கைகளில் இருக்கும் பத்து விரல்களில் அமைந்திருக்கும் மச்சமும் அதனால் கிடைக்கக்கூடிய பலன்களையும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

kai viral macha palan

முதலில் இடது கையை பார்ப்போம். பெண்களைப் பொறுத்தவரை இடது கையில் இருக்கும் ரேகையை பொறுத்து தான் பலன்கள் கூறப்படுகின்றன. ஆண்களுக்குத்தான் வலது கையில் ரேகை பார்ப்பது உண்டு. ஒரு பெண்ணின் இடக்கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் அதிகம் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள், கண்ணியம் தவறாமல் இருப்பார்கள் என்கிறது ஜோதிடம். அதற்கு அடுத்த ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் இவர்களுக்கு யாரையும் ஏமாற்றும் எண்ணம் வரவே செய்யாது, எப்பொழுதும் இரக்க சுபாவத்துடன் இருப்பார்கள். அதுவே நடுவிரலில் மச்சம் இருந்தால் இறை பக்தி அதிகமாக இருக்குமாம். மோதிர விரலில் மச்சம் இருந்தால் இவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை சந்திப்பார்கள். சுண்டு விரலில் மச்சம் இருந்தால் வசதி வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.

அடுத்ததாக வலது கை விரல்களில் பலன்களை பார்ப்போம். ஒரு பெண்ணின் வலது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் அவர்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும், அமைதியான சுபாவம் கொண்டவர்களாகவும், அறிவாளியாகவும் இருப்பார்கள். ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் வெகுளித்தனம் ஆகவும், யாரையும் சரியாக புரிந்து கொள்ளாமலும் இருப்பார்கள். நடுவிரலில் மச்சம் இருந்தால் எதையும் போராடித்தான் இவர்கள் பெற வேண்டியிருக்கும், திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். மோதிர விரலில் மச்சம் இருந்தால் எப்பொழுதும் மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவார்கள். சுண்டு விரலில் மச்சம் இருந்தால் அப்பாவித்தனமான லட்சணத்தை கொண்டிருப்பார்கள், எதையும் எளிதில் நம்பி விடுவார்கள்.

mole in finger

பெண்களின் வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும்? என்று தெரியாதவர்களாக இருப்பார்கள். தேவையில்லாத இடத்தில் பேசி நல்லவர்களையும் பகைத்துக் கொள்ளக் கூடிய அமைப்பைக் கொண்டவர்கள். அதுவே இடது உள்ளங்கையில் ஒரு பெண்ணுக்கு மச்சம் இருந்தால் அவள் இனிமையாகவும், மரியாதையாகவும், பணிவுடனும் பழகக்கூடிய நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். வலது புறங்கையில் மச்சம் இருந்தால் நட்பு வட்டம் இவர்களுக்கு பெரிதாக இருக்கும். இடது புறங்கையில் மச்சம் இருந்தால் வம்பு சண்டைக்கு போவார்கள், பல பேருடைய விரோதத்தை தேடிக் கொள்வார்கள். இப்படியாக ஒரு பெண்ணின் விரல்களில் இருக்கும் மச்சத்தை கொண்டு சொல்லப்படும் பலன்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.