எந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு என்ன குணாதிசயம் இருக்கும் தெரியுமா?

astrology

ஜோதிட ரீதியாக ஒரு பெண் எந்த மாதத்தில் பிறந்தார் என்பதை வைத்து அவருடைய குணாதிசியங்களை கண்டுபிடிக்க இயலும். அந்தவகையில் பெண்களின் பிறந்த மாதத்தை வைத்து அவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

ஜனவரி

january

ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் தங்களது உணர்வுகளை அவ்வளவு எளிதில் அனைவரிடத்திலும் வெளிப்படுத்தமாட்டார்கள். இவர்கள் லட்சியம் நிரந்தவர்களாகவும், ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

பிப்ரவரி

February

- Advertisement -

பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்களை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஆகையால் இவர்களிடம் கொஞ்சம் பொறுமையாக பழகுவது சிறந்தது. இவர்கள் கணவனிடம் அன்பானவர்களாக இருப்பார்கள்.

மார்ச்

MARCH

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்களிடம் இயல்பாகவே அனைவரையும் கவரும் ஏதோ ஒன்று இருக்கும். அது அவர்களது பேச்சு திறனாக இருக்கலாம் அல்லது அழகாக இருக்கலாம். ஆகையால் இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுவார்கள். இவர்கள் எளிதாக காதலில் விழுந்து விட மாட்டார்கள். இவர்களின் குணத்தில் நேர்மை இருக்கும்.

ஏப்ரல்

APRIL

ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் அனைவருடனும் மிக எளிதாக பேசி பழகிவிடுவார்கள். அனால் இவர்கள் தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே மனதில் உள்ள ரகசியங்களை கூறுவார்கள். இவர்கள் இராஜ தந்திரம் மிக்கவர்களாக இருப்பார்கள். அதோடு சிலருக்கு கொஞ்சம் பொறாமையும் இருக்கும்.

மே

MAY

மே மதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களிடம் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென்று எப்போதும் ஒரு தனிக் கோட்பாடுகள் இருக்கும். இவர்கள் உறதியான மற்றும் விடாப்பிடியான குணம் கொண்டவர்கள்.

ஜூன்

JUNE

ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் அனைவரிடமும் எளிதாக பேசுவார்கள். மற்றவர்களிடம் எப்போதும் ஒளிவுமறைவின்றி நடந்துக் கொள்வார்கள்.

ஜூலை

JULY

ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் எப்போதும் பிரச்சனை இன்றி வாழ நினைப்பவர்கள். ஆகையால் இவர்கள் யார் வம்பு தும்பிற்கு செல்லமாட்டார்கள். இவர்களிடம் நேர்மை, அறிவு, அழகு ஆகிய மூன்றும் இருக்கும்.

ஆகஸ்ட்

august

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் எதிலும் வென்று காட்டும் திறன் பெற்றவர். இவர்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதேபோல் இவர்கள் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

செப்டம்பர்

SEPTEMBER

செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் யாராவது தவறு செய்தால் அதை அவ்வளவு எளிதில் மன்னிக்க மாட்டார்கள். ஆகையால் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இவர்கள் அழகு, அன்பு, கட்டுப்பாடு ஆகிய மூன்றின் கலவையாக இருப்பார்கள். இவர்கள் ஒருவருடன் பழகினால் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அக்டோபர்

OCTOBER

அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் அவ்வளவு எளிதில் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் வெறுக்கமாட்டார்கள்.

நவம்பர்

NOVEMBER

நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் உன்மையை மட்டுமே பேசுபவர்கள். ஆகையால் இவர்கள் ஒருவர் பொய் சொன்னால் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.
இவர்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

டிசம்பர்

DECEMBER

டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடந்துகொள்ளும் தன்மை கொண்டவர்கள். இவர்களிடம் பொறுமை சற்று கம்மியாகவே இருக்கும்..