இந்த தூண் இடிந்து விழுந்தால் உலகம் அழிந்துவிடுமாம்

pillar

இந்து மாதத்தில் உள்ள சில நம்பிக்கைகள் அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவும், அறிவியல் ரீதியாக விடை அறியமுடியாத புதிராகவும் உள்ளது. அந்த வகையில் பல யுகங்களை கடந்து நிற்கும் ஒரு தூணை பற்றியும், கலியுகத்தின் ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப ஸ்வாமிகள் கோயிலைப் பற்றியும், அதற்கு பின்னால் ஒளிந்துள்ள நம்பிக்கைகளை பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

cave temple

மகாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத் நகர் மாவட்டத்தில் “ஹரிஷ்சந்திரகட்” எனும் கோவில் அமைந்துள்ளது. 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு அருகில் பல குகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் “கேதாரேஷ்வர்” என்ற ஆச்சரிய குகை.

இந்த குகைக்குள்ளே நீரினால் சூழப்பட்ட ஐந்தடி நீளமுடைய சிவலிங்கம் ஒன்று இருக்கிறது. எப்போதும் மிகவும் குளிர்ச்சியாகவே உள்ள அந்த நீரை கடந்து லிங்கத்தை அடைவதென்பது சற்று கடினமான விடயம் தான். சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் உள்ளன. அவை “சத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்” ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவதற்கு முன்பும் அந்த யுகத்தை குறிக்கும் தூண் இங்கு இடிந்து விழுந்துவிடுமாம். அந்த வகையில் இங்கு தற்போது 3 தூண்கள் இடிந்த நிலையில், கலியுகத்தை குறிக்கும் நான்காவது தூண் மட்டும் நிலைத்து நிற்கிறது. கலியுகம் முடியும் தருவாயில் இந்த தூணும் இடிந்து விழுந்துவிடும் என்றும் அதற்கு பின் உலகம் அழிந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.