காலபைரவரை முறைப்படி இப்படித்தான் வணங்க வேண்டும்.

bairavar

நமக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும், மனதை ஒரு நிலைப்படுத்தி பைரவரை மனதார நினைத்து அழைத்தாலே போதும். அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவி செய்பவர் தான் பைரவர். பைரவரை மனதார நினைத்து வழிபட்ட பக்தர்களை என்றுமே அவர் கைவிட்டதில்லை. காலம் காலமாகவே இருந்த இந்த ஒரு உண்மை சமீபகாலமாகத்தான் மக்களிடையே பரவி வருகிறது. பைரவர் என்றாலே மனதில் இருக்கும் பயத்தை நீக்குபவர் என்று தான் அர்த்தம். ஏனென்றால் எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் இவரே. இவர் சிவபெருமானின் அம்சமாகத் தான் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

kaala bairavar

அடுத்ததாக காலபைரவர் என்று சொன்னாள் நம் நினைவுக்கு வருவது காசி நகரம் தான். காசி ஒரு புண்ணிய நகரமாக கருதப்படுகிறது. அந்த புண்ணிய பூமியை காக்கும் காவல் தெய்வமே இந்த காலபைரவர் தான். காலபைரவருக்கு வழிபாடுகள் முதலில் முடிக்கப்பட்டு தான், பின்பு காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. காசிக்கு செல்பவர்கள் கால பைரவரையும் தரிசித்தால் தான் அவர்களுடைய வழிபாடு பரிபூரணம் அடையும் என்பது நிதர்சனமான உண்மை.

காலபைரவரை வழிபடுவதற்கு உகந்த நாள் அஷ்டமி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் காலபைரவரை ராகுகாலத்தில் வழிபடும்போது, எப்படி வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு கால சமயத்தில், எலுமிச்சைப்பழ மாலையும், விபூதி அபிஷேகமும் செய்து, அதன் பின்பு அலங்காரம் முடிந்தவுடன் வடைமாலை அணிவித்து, எள் கலந்த சாதம் நைவேத்தியமாக படித்து வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

elumichai-palam

- Advertisement -

திங்கள் கிழமை அன்று ராகு கால சமயத்தில், அல்லிமலர் சூட்டி, பாகற்காய் கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சூட்டி, துவரம் பருப்பு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும்.

புதன்கிழமை ராகு கால வேளையில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பாசிப்பருப்பு கலந்த சாதத்தை நைவேத்யமாக செய்யவேண்டும். வெண்பொங்கல் செய்தாலும் பரவாயில்லை.

வியாழக் கிழமை ராகு கால நேரத்தில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாக அணிவித்து, பால் பாயாசம், சுண்டலை நைவேத்தியம் படைக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை ராகுகால சமயத்தில் தாமரை மலர்களை மாலையாக தொடுத்து, சர்க்கரை பொங்கல் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பு பிரசாதம் நைவேத்தியமாக படைக்கப்படும் வேண்டும்.

arali

சனிக்கிழமை ராகு காலம் சமயத்தில்  நாகலிங்கப் பூவை மாலையாக கட்டி, பைரவருக்கு அணிவித்து, பால் பாயசம், எள் கலந்த சாதம், கருப்பு திராட்சை இவற்றை நைவேத்தியமாக படைக்கவேண்டும்.

சனிபகவானுக்கு குருவாக இருப்பவர் பைரவர் தான். பைரவரை தொடர்ந்து முறையாக வழிபட்டு வந்தால் சனிபகவானால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் சற்று குறையும். சிவபெருமானின் கோவில்களில் வடகிழக்கு மூலையில் பைரவருக்கு தனி சன்னதி இருக்கும். அந்த பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் நிச்சயம் நல்ல பலன் உண்டு. காலபைரவருக்கு ராகு காலத்தில் செய்யப்படும் பிரசாதங்களை, அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுவது நல்ல பலனை தரும்.

இதையும் படிக்கலாமே
மனதில் நினைத்ததெல்லாம் நிறைவேற வேண்டுமா? இந்த 2 வார்த்தையை எழுதினாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:

Here we have Bairavar valipadu murai Tamil. kaala bairavar. Bairavar valipadu Tamil. bairavar.