அயன் பாக்ஸ் கரண்ட் இல்லாம துணியை அயன் பண்ணும் புதிய டெக்னிக்.

wringle cloth
- Advertisement -

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை அனைவரும் அறிந்த ஒன்று தான். நாம் உடுத்தும் ஆடையானது எப்போதும் சுத்தமாகவும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் இருக்கும் பட்சத்தில் பிறருக்கு நம்மிடத்தில் நல்ல ஒரு அபிப்பிராயமும், மரியாதையும் ஏற்படும். ஆகையால் தான் இந்த பழமொழியை அந்த காலம் முதல் இன்று வரை அனைவரும் சொல்லி வருகிறார்கள்.

ஆடையை நேர்த்தியாக அணிய வேண்டும் என்றால் முதலில் ஆடைகளில் அழுக்கு, சுருக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆடைகள் கசங்கி கந்தலாக இருந்தால் அதுவே நம்முடைய மரியாதையை குறைக்கும். முன் காலத்தில் எல்லாம் துணிகளை அயன் செய்ய இஸ்திரி பெட்டியை பயன்படுத்தினார்கள். இப்பொழுது மின்சாரத்தின் உதவியுடன் அயன் பாக்ஸ் கொண்டு அயன் செய்து உடுத்துகிறோம்.

- Advertisement -

இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் துணிகளை அயன் செய்ய முற்றிலும் வித்தியாசமான ஒரு முறையை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த முறைக்கு அயன் பாக்ஸ் தேவையில்லை, கரண்ட் தேவையில்லை அனைத்து செலவும் மிச்சம். அதுமட்டுமின்றி இது அவசர நேரத்திற்கு கை கொடுக்கும் என்பது தான் முக்கியமான தகவல். அதைப்பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

துணிகளை எளிமையாக அயன் செய்ய

இந்த முறையில் துணிகளை அயன் செய்ய நமக்கு கருங்கல் தேவை. இது தெரு ஓரங்களில் கிடைக்கும். அதை கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி எடுத்து வந்த கற்களை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் குக்கர் வைத்து இந்த கருங்கல்லை அதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கர் மூடியை விசிலுடன் போட்டு விடுங்கள். குக்கர் அடுப்பில் இருக்கும் போது விசில் போட வேண்டாம் அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு விசில் போடுங்கள்.

இப்போது கசங்கிய துணியை ஒரு பாய் அல்லது பெட்ஷீட்டின் மீது விரித்து விட்டு இந்த குக்கரை வைத்து அப்படியே துணைகளின் மீது லேசாக அழுத்தம் கொடுத்து தேய்த்து பாருங்கள். கடையில் கொடுத்து அயன் பண்ணியதை போலவே நல்ல நேர்த்தியுடன் அயனிங் செய்யப்பட்டது போல இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த முறையைப் பின்பற்றி பல்லி தொல்லையிலிருந்து வெளிவரலாம்.

கடையில் கொடுத்தால் உடனே அயன் செய்து கொடுத்து விடுவார்கள். அதுவும் இல்லாமல் போனால் வீட்டில் இருக்கும் அயன் பாக்ஸ் வைத்து எளிமையாக செய்து விடலாம் இப்படி நீங்கள் நினைக்கலாம். இது போன்ற எளிமையான முறைகளை தெரிந்து வைத்துக் கொண்டால் மின்சாரம் இல்லாத சமயத்தில் கூட இது போல செய்து கொள்ளலாம்.

- Advertisement -