யானைக்கு கண் பார்வை தந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பற்றி தெரியுமா ?

yaanai gopuram

எத்தனையோ வகையான உயிர்களை இப்பூமியில் படைத்திருக்கிறான் இறைவன். அப்படியான உயிர்களில் சிலவற்றை தன் அறிவைக் கொண்டு, தன் வாழ்க்கைக்கு உதவும் வகையில் பயன்படுத்திக்கொள்கிறான் மனிதன். அனைத்தையும் படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டும்மல்லாமல் ஐந்தறிவு விலங்குகளுக்கும் அருள் புரிந்த பல சம்பவங்கள் நம் நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன அதில் ஒன்று தான் இது.

Elephant

மைசூர் சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்த ஹைதர் அலியின் பட்டத்து யானைக்கு, அதன் கண்பார்வையில் ஏற்பட்ட பிரச்சனையால் மிகவும் அவதியுற்றது. பல விலங்குகள் நல வைத்தியர்கள் வந்து பார்த்தும் தங்களால் யானையின் பார்வைக் குறைபாட்டை போக்க முடியவில்லை என்று கைவிரித்து விட்டனர். அப்போது
யாரோ ஒரு மந்திரி “பட்டத்து யானையை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபடச் செய்தால் யானையின் பார்வை திரும்பலாம்” என
யோசனைக் கூறினார். இந்த யோசனையை ஹைதர் அலி ஏற்றுக் கொண்டார்.

அதன் படியே அந்த யானையை தினமும் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலை பிரதட்சிணம் வருமாறு செய்தனர். பிரதட்சிணத்தை முடித்த பின் யானையின் கண்களில் அக்கோவிலின் துளசி தீர்த்தத் துளிகள் சிறிது விடப்பட்டன. இதை சில நாட்களாக செய்து வந்த யானைக்கு விரைவிலேயே அதன் கண்பார்வை குறைபாடு நீங்கி நலம் பெற்றது. இதைக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ந்த ஹைதர் அலி இக்கோவிலின் தெய்வமான நஞ்சுண்டேஸ்வரருக்கு மரகதக் கல் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். இக்கோவில் கர்நாடக மாநிலத்தில் நஞ்சன்கூடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இது போன்ற மேலும் பல பக்தி கதைகள் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.