கோடீஸ்வர யோகம் பெற 3 ராசிக்காரர்கள் செய்யவேண்டியது இது தான்.

astrology

கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்ற ஆசை பொதுவாக எல்லோரது மனத்திலும் இருக்கதான் செய்கிறது. சிலர் அதை வெளிகாட்டிக்கொள்வதுண்டு. சிலர் அதை வெளிகாட்டிக்கொள்வது கிடையாது. சிலர் சுயமாக உழைத்து பணக்காரராகவேண்டும் என்று நினைப்பார்கள் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள். எது எப்படியோ பணம் குறித்த ஆசை பலரிடமும் இருப்பது உண்மை தான். அந்த வகையில் இந்த வருடம் சில ராசிக்காரர்கள் ஒரு சில கோவில்களுக்கு சரியான நாளில் சென்று வழிபடுவதன் மூலம் மிக எளிதில் சிரிப்பான் பலன்களை அடைய முடியும்.

astrology

ரிஷப ராசிக்காரர்களுக்கான கோவில் :
ரிஷப ராசிக்காரர்கள் கால காலேஸ்வரர் கோயிலிற்கு என்று வழிபடுவதன் மூலம் மிக சிறப்பான பலன்களை பெறலாம். சுமார் 1300 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவில் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்த கோவிலாகும். ரிஷப ராசியின் அதிபதியாக விளங்கும் சுக்கிரபகவானின் தன்மைக்கு ஏற்ப இந்த கோவில் அமைந்துள்ளதால் இது இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் உள்ளது. அற்புதமான பல அறிய யோகங்களை அள்ளித்தரும் தன்மை இங்குள்ள மூலவருக்கு உண்டு. ரிஷப ராசிக்காரர்கள் இந்த கோயிலிற்கு செல்கையில் மூலவருக்கு தும்பைப் பூ மாலை சார்த்தி வழிபடுவது அவசியம்.

ரிஷப ராசிக்கு சனி நடக்கும் சமயத்தில் அதற்கான பரிகார ஹோமத்தை இங்கு நடத்துவது விஷேஷம். இதனால் சனியின் தாக்கம் குறையும்.கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த கோவிலின் நடை காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரை திறந்திருக்கும். பிறகு மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். கோயிலிற்கு செல்ல பேருந்து வசதிகளும் உண்டு.

கடக ராசிக்காரர்களுக்கான கோவில் :

astrology

கடக ராசிக்காரர்கள் விழுப்புரம் அருகே உள்ள சந்திரமெளலீஸ்வரரை வழிபடுவதன் மூலம் பொருட்செல்வம் மட்டுமின்றி சகலவிதமான செல்வங்களையும் அடைய முடியும். தாய்க்கு உரிய கிரகமாக விளங்குபவர் சந்திரன். அவரே கடக ராசிக்கு அதிபதியாக விளங்குகிறார். சந்திரனை பிறையில் சூடிய சந்திரமெளலீஸ்வரரை வழிபடுவதன் மூலம் சந்திர பலம் கூடும். இந்த கோவிலில் சித்தரின் சன்னதி உள்ளது. அந்த சன்னதியில் அமர்ந்து ரிஷப ராசிக்கார்கள் தியானம் செய்வது அவசியம். பிறவி பயனை அடைந்த ஒரு நிம்மதியை தரக்கூடிய சக்தி அந்த சன்னதிக்கு உண்டு. இங்கு வக்ரகாளி அம்மன் ஈசானியத்தை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனை வழிபடுவதன் மூலம் நம்மிடம் உள்ள தீய சக்திகள் அனைத்தும் வெளியேறும், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அரசாங்க பணிக்காக நீண்ட காலம் காத்திருப்போருக்கு பணி கிடைக்கும். பௌர்ணமி தினத்தில் இங்கு பல விஷேஷ பூஜைகள் நடைபெறும். அதில் ரிஷப ராசிக்கார்கள் கலந்து கொள்வது நல்லது.

இது சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயம் ஆகும். கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் மும்முக லிங்கமாக அமைந்துள்ளது இங்குள்ள சிவ லிங்கம். வராக நதிக்கரை ஓரம் அமைந்துள்ள இந்த கோவிலின் அருகில் உள்ள மரங்கள் கல்லாக மாறி உள்ளன. அந்த அளவிற்கு பழமை வாய்ந்தது இந்த கோவில். இந்த கோவிலின் நடை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கான கோவில் :

astrology

சிம்ம ராசிக்கு அதிபதியாக விளங்குபவர் சூரிய பகவான். இவரே ஒருவருக்கு அரசியல் ரீதியாகவும் அரசாங்க ரீதியாகவும் உயர் பதவிகளை அடையும் நிலையை தரவல்லவர். சூரியனுக்கு உகந்த உத்திர நட்சத்திரத்தையே பெயராக கொண்டு விளங்குகின்ற திருத்தலமே உத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோவில். இந்த கோவிலில் அருபாலிக்கும் இறைவனை சிம்ம ராசிக்காரர்கள் வழிபடுவதன் மூலம் வாழ்வில் அளவற்ற முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலில் அபரிதமான வளர்ச்சி இருக்கும். வீட்டில் செல்வம் கொழிக்கும். யோகிகள் பலருக்கு காட்சி கொடுத்த பெருமை இங்குள்ள மூலவருக்கு உண்டு. இவரை வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் நீங்கி யோகம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள இறைவனுக்கு மல்லிகை பூ மலை சார்த்தி வழிபடுவது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பு சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:
ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் குபேர லட்சுமி ஹோமம் பற்றி தெரியுமா ?

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள இந்த கோவிலின் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். இங்குள்ள மூலவர் சுயம்புவாக தோன்றியவர். ஐந்தரை அடி உயரத்தில் விலை மதிக்கமுடியாத மரகத லிங்கம் கொண்ட கோவில் இது.