நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய பல பொருட்கள் நம்முடைய அழகை மேம்படுத்தக்கூடியதாக திகழ்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக தலைமுடியிலும் முகத்திலும் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சமையலறையே சிறந்த இடமாக திகழ்கிறது. சமையலறையில் இருக்கக்கூடிய வெந்தயம் உளுந்து போன்ற பொருட்கள் எந்த அளவிற்கு நம்முடைய அழகை மேம்படுத்துமோ அதே போல் தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளும் நம்முடைய அழகை மேம்படுத்தும் என்றே கூறலாம். அந்த வகையில் பீட்ரூட்ரை பயன்படுத்தி முகத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் மாற்றுவதைப் பற்றிதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
இளமையான பொலிவான சருமத்தை பெற
பீட்ரூட்டில் அதிக அளவு இரும்பு சத்தும் விட்டமின்களும் இருக்கிறது. மேலும் இதில் ஆண்டி ஆக்சைடு அதிக அளவில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய முகத்திற்கு தேவையான கொலச்சின் இதில் அதிக அளவில் இருப்பதால் பீட்ரூட்டை நாம் அடிக்கடி நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. எப்படி நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறதோ அதே போல் நம்முடைய முகத்திற்கு இந்த பீட்ரூட்ரை பயன்படுத்தி பேஸ்புக் போட்டோமென்றால் முகமும் ஆரோக்கியமாக திகழும். அந்த ஃபேஸ் பேக்கை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த ஃபேஸ் பேக்கை நாம் வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை உபயோகப்படுத்தலாம். இதற்கு ஒரு சிறிய அளவிலான ஒரு பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கெட்டியான தயிராக இரண்டு ஸ்பூன் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணெயை ஊற்றி நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை உங்களுடைய முகத்திலும் கழுத்திலும் உடம்பிலும் கூட தடவிக் கொள்ளலாம். நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம் தோலில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி தளர்ந்த நிலையில் இருக்கும் சருமம் கூட இறுகி இளமையான தோற்றத்தை தரும்.
அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சருமத்தில் ஒரு இடத்தில் நிறமாகவும் ஒரு இடத்தில் கருமையாகவும் தென்படும். இந்த ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து சரிசமமான நிறத்தை தரும். அதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் கருந்திட்டுகள் போன்றவற்றை நீக்கி முகத்திற்கு பொலிவையும், நம்முடைய நிறத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு அற்புதமான பலன்களை தரக்கூடிய பீட்ரூட்டை நாம் நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தி என்றும் இளமையுடனும் பொலிவுடன் திகழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.