நீங்கள் யாரென்று உங்களின் கட்டை விரல் கூறி விடும் தெரியுமா?

thumb-finger

ஒரு நபரின் விரல்கள் மூலம் அவரது குணாதிசயம் மற்றும் பண்புகளை கணித்து விட முடியும் என்கிறது கைரேகை ஜோசியம். அதிலும் கட்டைவிரல் என்பது நமது கைகளில் முக்கியமான ஒரு விரல் ஆகும். இதுவே விரல்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. மற்ற விரல்களை விட கட்டை விரலானது ஒரு மனிதனின் வாழ்க்கை தேர்வுகளையும், பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. அத்தகைய கட்டைவிரலின் முக்கியத்துவத்தையும், செல்வாக்கையும் பற்றி விரிவாக இப்பதிவில் காண்போம்.

thumb finger

ஜோதிடத்தின்படி ஒவ்வொருவரின் கட்டைவிரலும் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதன் வடிவம், அமைப்பு, வடிவமைப்பு போன்றவை வேறுபட்டவை. அதன் வடிவம் மற்றும் அமைப்பு ஒரு நபரின் ஆளுமை திறனை பிரதிபலிக்கிறது. கட்டை விரலில் இருந்து மனிதனின் இயல்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

குறுகிய கட்டைவிரல்:
இயல்பான கட்டை விரலை விட இவர்களது விரல் குறுகி சிறியதாக காணப்படும். அவர்கள் தங்கள் அறிவை விட மனதிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு சரியான நேரத்தில் முடிவுகளை தீர்க்கமாக எடுக்க தெரியாது. பிறரின் பரிந்துரைகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்கள். சுயபுத்தி இவர்களிடம் கிடையாது. அடுத்தவர்களின் சொல்படி நடப்பார்கள். இவர்கள் எழுத்தாளர்கள் அல்லது ஓவியர்கள் படைப்பாளர்கள் மீது ஆர்வம் மிக்கவர்கள். இசை மற்றும் கலை சார்ந்த தொழில்களில் சிறந்து விளங்குபவர்கள்.

 short-thumb-finger

கடினமான கட்டைவிரல்:
சாதாரண விரல்களை விட மிகவும் கடினமாக இவர்களின் கட்டைவிரல் அமைந்திருக்கும். இவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள். தம் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தனக்கு கொடுத்த வேலையை செய்து முடித்த பின்னரே மற்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள். கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்காதவர்கள். இவர்கள் வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்தவர்கள். கற்பனை உலகில் இவர்கள் செல்ல தயங்குபவர்கள். அறிவுபூர்வமாக சிந்திக்கக் கூடியவர்கள். மென்மை தன்மையை இயல்பில் கொண்டு வருவதற்கு முயற்சிப்பவர்கள் ஆனால் அதிகம் யோசிப்பவர்கள் எனவே காரியத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள்.

- Advertisement -

hard thumb

நீண்ட கட்டைவிரல்:
சாதாரணமாக இருப்பதை விட சிலருக்கு நீளமான கட்டைவிரல் அமைந்திருக்கும். அந்த நபருக்கு அறிவாற்றல் அதிகமாக காணப்படும். மிகவும் வேகமாக சிந்திக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். அதுவே அவர்களது வெற்றிக்கு பாதையாக இருக்கும். இவர்கள் பிறரிடமிருந்து மாறுபட்டவர்கள். எதையும் சவாலாக எடுத்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் துணிந்து செயல்படுவார்கள். இவர்கள் கணிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக விளங்குவார்கள். தங்களின் இயல்பான குணங்களை பயன்படுத்தி இலக்கை நோக்கி பயணிப்பவர்கள்.

 length thumb

கடுமையான வளைவு கட்டைவிரல்:
இவர்களது கட்டைவிரல் மேலிருந்து வரும் முதல் ரேகை வரை நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையில் இருக்கும் அதாவது முதல் ரேகை வரை இவர்களால் நன்கு வளைக்க முடியும். இதுபோன்ற அமைப்பை கொண்டவர்கள் மிகவும் விரக்தியாக இருப்பார்கள். சோம்பேறித்தனம் உடையவர்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். யாரிடமும் எளிதில் பழகி விடமாட்டார்கள். அதிக நேரத்தை தனிமையில் செலவிடுபவர்கள். சமூகத்திற்கு எதிராக சிந்திக்கக் கூடியவர்கள். இவர்களுக்கென தனி கொள்கை, கோட்பாடுகளை வைத்திருப்பார்கள். உலகத்தில் வித்தியாசமான விஷயங்களால் எளிதாக ஈர்க்கப்பட்டு விடுவார்கள்.

bending thumb

சிறந்த கட்டைவிரல்:
சிறந்த கட்டை விரல் என்பது ஆள்காட்டி விரலில் இருந்த மணிக்கட்டை நோக்கி நன்கு வளையும் தன்மை கொண்டிருக்கும் அதையே சிறந்த கட்டைவிரல் என்று கூறுகிறோம். இதுபோன்ற அமைப்பில் உள்ள கட்டை விரலை கொண்ட நபர்கள் அற்புதமான சுயகட்டுப்பாடு மற்றும் பொறுமையை கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் தன் பொறுமையை இவர்கள் இழக்க மாட்டார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும்? என்ன செய்யக் கூடாது? என்பதையும் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் மிகவும் கனிவானவர்கள். முன்னோக்கு சிந்தனையாளர்கள்.

bending thumb

மிருதுவான கட்டைவிரல்:
இவர்களின் கட்டைவிரல் மிகவும் மென்மையாக அமைந்திருக்கும். இவர்கள் இயற்கையிலேயே மென்மையானவர்கள் என்றே கூறலாம். கடினமான சூழ்நிலைகளையும் தம் மென்மை தன்மையால் எளிதாக வெற்றி கொண்டு விடுவர்வார்கள். மிகவும் நிதானமாக ஒரு சூழ்நிலையை கையாள்பவர்கள். அதிலிருந்து சிறந்த ஒரு முடிவை தேர்ந்தெடுப்பவர்கள். எந்த கடினமான சூழ்நிலையையும் தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள நினைப்பவர்கள். இவர்களுக்கு செல்வத்தை பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும். செல்வத்தை எவ்வாறு அதிகரிப்பது என்கிற அறிவு கொண்டவர்கள்.

thumb finger

நேரான கட்டைவிரல்:
இந்த கட்டை விரலானது ஒரு தூணைப் போல நேராக வளைந்து கொடுக்காமல் நிற்கும் தன்மையுடையது. இது உறுதியான மற்றும் வலுவான எலும்பு அமைப்பை கொண்டது. இவர்கள் சிறந்த உழைப்பாளிகளாக கருதப்படுவார்கள். தன் சுய உழைப்பில் கடினமாக முன்னேற கூடியவர்கள். இந்த கட்டைவிரலை கொண்ட நபர்களிடமிருந்து மற்றவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவர்கள் பெரும்பாலும் எதையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நேர்மறையான சிந்தனை இவர்களிடம் இருக்காது. அதிகம் கோபப்படுபவர்கள். மற்றவர்களிடம் எளிதாக அவப்பெயரை சம்பாதிப்பவர்கள். இவர்களது கோபம் இவர்களது பலவீனமாக இருக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள். எந்த அளவிற்கு அதிகமாக இவர்களிடம் கோபம் இருக்கிறதோ அதே அளவுக்கு அதிக பாசம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 straight-thumb

இதையும் படிக்கலாமே
எந்த வயதில் சொந்த வீடு? 12 ராசிக்குமான ஜோதிடம்.
இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kattai viral palangal in Tamil. Kattai viral jothidam in Tamil. Kattai viral josiyam in Tamil. Kattai viral ragasiyam in Tamil.