யுகபுருஷனாம் சாயி – சாய் பாபா பாடல்

Sai baba tamil song

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே என்று தொடங்கும் சாய் பாபா பாடல் நம் மனதை மேன்மை அடைய செய்கிறது. இந்த அற்புதமான சாய் பாபா பாடல் மற்றும் பாடல் வரிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒருவர் பாடலை கேட்டுக்கொண்டே பாட நினைத்தால் இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். யுகபுருஷனாம் சாயி பாடல் வீடியோ வடிவில் இதோ.

யுகபுருஷனாம் சாய் பாபா பாடல் :

யுகபுருஷனாம் சாய் பாபா பாடல் வரிகள் :

சதா சத்ஸ்வரூபம் பிரசன்னாத் மபாவம்
நமாமீஸ்வரம் சத்குரும் சாயிநாதம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே
படிக்கின்ற பேருக்கு நலம் நல்குமே
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே
படிக்கின்ற பேருக்கு நலம் நல்குமே

- Advertisement -

வெற்றிகளை தந்திடும் பாராயணம்
வினைகளை விலக்கிடும் அவரபயமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே..

கணபதியை முதன் முதலில் தினம் பணிய வேண்டுமே
பிறகு பாபா பதமே பூஜித்து வணங்கு நீ
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

மகிமை மிகு கிரண்டமே பக்தியுடன் படிப்போமே…
ஆக இருள் விலகிடவே ஆரத்தி தருவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே…

ஓரேழு நாட்களில் கிரண்டம் நாம் படித்து
தூப தீபமே காட்டி நெய்வேத்தியமே செய்து
ஏழை எளியவரை அன்புடனே நாம் அழைத்து
அன்னதானமே செய்து சாயி கிருபை பெறுவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே..

ஒரு பொழுது தான் உண்டு தரையிலே தான் உறங்கி
பட்டற்ற நிலையிலே ஆசைகள் தான் துறந்து
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

கிரண்டம் முழுவதும் படித்து தூய மிகு மறுநாள்
தவபலனை பெற்று சுகங்களை அடைவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே…

இதையும் படிக்கலாமே:
உலகாளும் சாயி – சாய் பாபா பாடல்

English Overview:
Yugapurusanam sayi is a sai baba song in tamil. One can hear Yugapurusanam Sayi sai baba tamil song and download it. Here Yugapurusanam Sai baba tamil song lyrics also added.