- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்காலை உணவை எளிமையாக முடிக்க இரண்டு பாக்கெட் ராகி சேமியா இருந்தால் மட்டும் போதும்

காலை உணவை எளிமையாக முடிக்க இரண்டு பாக்கெட் ராகி சேமியா இருந்தால் மட்டும் போதும்

- Advertisement -

ஒவ்வொரு நாளும் காலை உணவாக இட்லி, தோசை தான் அதிகமாக செய்யப்படுகிறது. ஆனால் என்றாவது ஒருநாள் மாவு இல்லாத நேரத்தில் இந்த ராகி சேமியா புட்டை ஒரு முறை செய்து பாருங்கள். அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இதனை செய்வதற்கு அதிக நேரம் கூட தேவைப்படாது. நினைத்த உடனேயே 10 நிமிடத்தில் செய்துவிடலாம். இந்த ராகி புட்டை மதிய உணவாக குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்துவிடலாம். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இந்த சுவையான ராகி சேமியா புட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ராகி சேமியா – இரண்டு பாக்கெட், உப்பு – அரை ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய் – 5.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு வாய் அகன்ற கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கால் பங்கு தண்ணீர் வைத்து அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுள் ஒரு இட்லி தட்டை மட்டும் வைத்து, அதன் மீது ஒரு ஈரத் துணியை விரித்து வைக்க வேண்டும்.

பிறகு தண்ணீர் வெதுவெதுப்பாக சூடானதும், அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். பின்னர் இரண்டு பாக்கெட் சேமியாவை பிரித்து இந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு பிறகு தண்ணீரில் நனைத்த சேமியாவை இட்லி பாத்திரத்தில் உள்ள ஈரத் துணியின் மீது வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து பத்து நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். பிறகு அரை மூடி தேங்காயை, தேங்காய் துருவல் வைத்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் 5 ஏலக்காய் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அவற்றை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி, மூடியைத் திறந்து, அதில் உள்ள சேமியாவை துணியுடன் சேர்த்து வெளியே எடுத்து, ஒரு தட்டின் மீது வைத்து விட வேண்டும். பிறகு இவை நன்றாக ஆறியதும், சேமியாவை துணியில் இருந்து தனியாக எடுத்து விட வேண்டும்.

பின்னர் ராகி சேமியாவுடன் தேங்காய் துருவல், 100 கிராம் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான ராகி சேமியா புட்டு தயாராகிவிட்டது. இதனை அப்படியே தட்டில் வைத்து மற்றவர்களுக்கு பரிமாறிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.

சற்று முன்