- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval05-07-2024 வெள்ளிக்கிழமை அமாவாசை வழிபாடு

05-07-2024 வெள்ளிக்கிழமை அமாவாசை வழிபாடு

- Advertisement -

ஆனி 21, 5.7.2024 வெள்ளிக்கிழமை அமாவாசை திதியானது வரவிருக்கின்றது. இந்த அமாவாசை திதி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகள் நமக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். வழக்கம் போல அமாவாசை நாளில் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் சமைத்து முடிக்கவும்.

ஆண்கள், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை சரியாக கொடுத்து விடுங்கள். மதியம் உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளை மாலை பின் சொல்ல கூடிய இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய குடும்பத்திற்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும். பித்ரு சாபம் உங்களுடைய குடும்பத்திற்கு இருந்தால் அவைகள் விலகும்.

- Advertisement -

சுபகாரிய தடை விலகும். திருமண வயதில் இருக்கும் பெண்கள் ஆண்களுக்கு கல்யாணம் நடக்கும். கல்யாணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இத்தனை நன்மைகளை நமக்கு கொடுக்கப் போகும் அந்த வழிபாட்டு முறையைப் பற்றிய விரிவான தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

வெள்ளிக்கிழமை அமாவாசையில் செய்ய வேண்டிய வழிபாடு.

வரும் வெள்ளிக்கிழமை அமாவாசை திதி அன்று மாலை 6:00 மணிக்கு உங்களுடைய பூஜை அறையில் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு தாம்பூல தட்டில் 2 வெற்றிலை, 2 பாக்கு, 2 வாழைப்பழம், பூ, 1 ரூபாய் நாணயம் வைத்துக் கொள்ளவும். இது ஒரு தாம்பூலம். முடிந்தவர்கள் இதில் மஞ்சள் குங்குமம் கூட வைக்கலாம்.

- Advertisement -

இன்னும் கொஞ்சம் கூடுதல் வசதி இருக்கிறது என்றால் இதில் ஒரு ரவிக்கை துணியும் வைக்கலாம். இன்னும் எங்களுக்கு வசதி இருக்கிறது என்பவர்கள் ஒரு புடவை ஒரு ரவிக்கை துணி வைத்து அதன் மேலே தாம்பூலத்தை வைத்து பூஜை அறையில் அலங்கரித்துக் கொள்ளுங்கள். இதுபோல 5 செட் தயார் செய்து கொள்ளவும்.

உங்களுடைய வீட்டில் சுமங்கலிகளாக இறந்து இருப்பார்கள் அல்லவா அவர்களை நினைத்து, குலதெய்வத்தை நினைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் வைத்த அந்த பொருட்களை எல்லாம் சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜை செய்ததன் மூலம் உங்களுக்கு முழு பலன் கிடைக்க வேண்டும் என்றால் இந்த பொருட்களை வசதி இல்லாதவர்களுக்கு ஏழை சுமங்களுக்கு தானம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அது எங்களுக்கு முடியாது அப்படிப்பட்டவர்களை தேட முடியாது என்றால் உங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தெரிந்தவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு ஏதாவது இனிப்பு பண்டங்களை சாப்பிட கொடுத்து, இந்த பொருளை தானமாக கொடுத்து, அவர்களுடைய காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டால், உங்களுடைய குடும்பத்தில் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டைகள் நீங்க விளக்கு பரிகாரம்

பித்ரு சாபம் நீங்கும். சுபகாரிய தடை விலகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ரொம்ப ரொம்ப எளிமையான பரிகாரம்தான். வீட்டில் இதை செய்ய முடியவில்லை என்றாலும் கோவிலில் கொண்டு போய் இந்த பொருட்களை அங்கு வருபவர்களுக்கு நீங்கள் தானமாக கொடுக்கலாம். தவறே கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் நாளை மறுநாள் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அமாவாசை நாளை தவிர விடாதிங்க. உங்களுடைய குடும்ப கஷ்டங்கள் தீர இந்த நாள் நிச்சயம் உங்களுக்கு நல்ல வழியை காட்டி தரும் என்ற நம்பிக்கையுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்