- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 09 ஆகஸ்ட் 2026

இன்றைய ராசிபலன் – 09 ஆகஸ்ட் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிரி பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். மனதில் பட்ட விஷயங்களை தெளிவாக வெளியில் பேசி விடுவீர்கள். பலருடைய பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு காணக்கூடிய சக்தி உங்களிடத்தில் இருந்து வெளிப்படும். தலைமை பொறுப்பை சரியாக வழி நடத்துவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பொருட்களை பணம் கொடுத்து வாங்குவதை தவிர்த்து விடுங்கள். புதிய முதலீடுகள் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நினைத்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் நல்லபடியாக நடக்கும். சொந்த வீடு வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கையில் நிறைய பணம் இருக்கு, எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை இன்று மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனதில் ஒரு பயம் இருக்கும். இந்த நாள் எப்படி செல்ல போகிறது என்ற பதட்டமும் இருக்கும். ஆனால் இறைவனின் அருளால் இந்த நாள் இனிய நாளாக தான் இருக்கும். தேவையற்ற பதட்டங்களை விட்டு விடுங்கள். உங்களுடைய வேலையில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை அதிகம் பேச வேண்டாம்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கையில் எடுத்த உடனேயே ஒரு வேலை முடிந்து விடாது. பல முயற்சிகளுக்கு பிறகு தான் வெற்றி உங்களை வந்து சேரும். ஆகவே இன்று தோல்விகளை கண்டு நீங்கள் சோர்ந்து உட்காரவே கூடாது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனம் தெளிவாக இருக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பல நாள் குழப்பங்கள் இன்று ஒரு நல்ல முடிவுக்கு வரும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை, இன்று கடவுள் உங்களை சோதித்து பார்க்க போகின்றான். ஆனால் நீங்கள் சோதனையில் ஜெயித்து விடுவீர்கள். அதற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பொய் சொல்லக்கூடாது. மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் உங்களை வந்து சேரும். வியாபாரத்தை பொருத்தவரை எல்லாம் நல்லபடியாக நடக்கும். இருந்தாலும் யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். இன்று விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று குடும்ப உறவுகளோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். மாலை நேரத்தில் வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும். சுபசெலவர்கள் ஏற்படும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையில்லாத டென்ஷன் தலைவலியை கொண்டு வரலாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். எப்படியாவது ஒரே நாளில் பணக்காரர் ஆகிவிட வேண்டும். ஒரே நாளில் இந்த வேலைகளை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் அது நடைமுறை வாழ்க்கைக்கு சரிபட்டு வராது. ஆர்வக்கோளாறு கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நடைமுறை வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டும் இன்று செய்யுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வினால் மன நிம்மதி கிடைக்கும்.

சற்று முன்