இந்த 1 ரூபாய் நாணயத்தை இப்படி செய்தால் போதுமே! ஒரே நாளில் 1 ரூபாயை, 1 கோடியாக மாற்றிவிடலாம்.

one-rupee

ஒரு ரூபாயை, ஒரு கோடி ரூபாயாக மாற்றக்கூடிய வித்தை தெரிந்திருந்தால், இந்த உலகத்தையே விலைக்கு வாங்கி இருக்கலாம். முதலில் பேராசை பெரு நஷ்டம். நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் தான், நான் கையில் தங்கும். உழைக்காமல் தானாக மந்திர தந்திரத்தால் வரக்கூடிய பணம் நமக்கு சொந்தமில்லை. அந்த வரிசையில் நீங்கள் உழைத்த பணம் உங்களை வந்தடைய, உங்களுடைய வாழ்க்கையில் நேர்மையாக முன்னேற்றமடைய ஆன்மீக ரீதியாக எந்த வழிபாட்டை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money

பொதுவாகவே ஒவ்வொரு அபிஷேக பொருளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வரிசையில் ஸ்வர்ண அபிஷேகத்தின்போது கோவிலில் நம்முடைய நகைகளை இறைவனுக்கு கொடுத்தால், நமக்கு அதிர்ஷ்டம். அப்படி தங்கநகை இல்லாதவர்கள் வெறும் 1 ரூபாய் நாணயத்தை ஸ்வர்ண அபிஷேகத்திற்கு கொடுத்து, வாங்கி நம்முடைய பணப்பெட்டியில் வைக்கலாம். அந்த 1 ரூபாய் நாணயமும் நிச்சயம் நமக்கு அதிர்ஷ்டகரமான தான் இருக்கும்.

இதோடு சேர்த்து நம்மில் நிறைய பேர் வீடுகளில் இப்போதெல்லாம் சிலை வழிபாட்டை செய்து வருகின்றோம். இந்த சிலைக்கு நம்மால் முடிந்த பாலபிஷேகம் பன்னீர் அபிஷேகம், முடியவில்லை என்றால் வெறும் தண்ணீரிலாவது அபிஷேகம் செய்து ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றோம். நீங்கள் இந்த சிலைக்கு அபிஷேகம் செய்யும்போது வெள்ளிக் கிழமைகளில் 11 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து அந்த சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

coins

11 ஒரு ரூபாய் நாணயங்களை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு சிலையின் சிரசில் மெதுவாக போட வேண்டும். நாணயங்களை டமால் டமால் என்று இறைவனின் தலைமீது கொட்டக் கூடாது. நினைவில் வைத்து கொண்டு மெதுவாக இந்த அபிஷேகத்தை செய்யுங்கள். அதன் பின்பு இந்த நாணயங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு சுத்தமான தண்ணீரைக் கொண்டு சிலைக்கு அபிஷேகம் செய்துவிட்டு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து வழக்கம் போல உங்களது பூஜையை செய்யலாம். இப்போது தனியாக எடுத்து வைத்திருக்கும் இந்த நாணயங்கள் உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். இதை எப்படி பயன்படுத்தலாம்.

abishegam1

இந்த நாணயத்தில் இருந்து ஒன்றை எடுத்து மனைவி, தன்னுடைய கையால் கணவருக்கு கொடுத்து வழியனுப்பி வைத்தால், அன்றைய நாள், கணவருக்கு லாபகரமாக அமையும். உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென்றால் இந்த 1 ரூபாய் நாணயத்தை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி முடிச்சுப் போட்டு காணிக்கையாக உண்டியலில் சேர்க்கலாம். இப்படியாக பல நல்ல விஷயங்களுக்கு இந்த நாணயத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்போதெல்லாம் நீங்கள் அபிஷேகம் செய்கிறீர்களோ அப்போதெல்லாம் ஒரு ரூபாய் நாணயங்களை உங்கள் வீட்டில் எப்போதும் பத்திரப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைகள் இல்லை என்றால், மீண்டும் மீண்டும் அதே பதினோரு நாணயத்தை அபிஷேகத்துக்கு பயன்படுத்தலாம் தவறில்லை. இந்த ஒரு ரூபாய் நாணயத்தின் மூலம் நிச்சயமாக கோடிக்கணக்கில் நன்மைகள் உங்களை தேடி வரும். வீட்டில் சுபிட்சம் நிலைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.