சித்திரை மாதத்தில் வரும் பிரதோஷம் என்றால் இது சிறப்பான பிரதோஷம் தான். அதிலும் வெகு நாட்கள் கழித்து சனி பிரதோஷம் வந்திருக்கிறது. இந்த மே மாதம் இரண்டு சனி பிரதோஷங்கள் வரவிருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது. நாளை மே 10ஆம் தேதி சனி மஹா பிரதோஷம். மே மாதம் 24 ஆம் தேதி வரவிருக்கும் பிரதோஷமும், சனி பிரதோஷமாக இருப்பது, கடவுள் நமக்கு கொடுத்த வரம்.
இந்த இரண்டு பிரதோஷத்தை தவறவிடாமல் சிவபெருமானை நீங்கள் வழிபாடு செய்துவிட்டால், அந்த பாக்கியத்தை சிவபெருமான் உங்களுக்கு கொடுத்துவிட்டால், உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் இதோடு முடிந்து போக போகிறது என்றுதான் அர்த்தம். ஆகவே, இந்த வழிபாட்டை யாரும் தவற விட வேண்டாம். இந்த சனி மகா பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்யக்கூடிய சில எளிமையான வழிபாட்டு முறைகளை இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.
பிரதோஷ விரதம் எப்படி இருப்பது என்று நம்மில் பல பேருக்கு தெரியும். ஆகவே, விரத முறைகளை தவிர்த்து விட்டு, சில புது விஷயங்களை இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய இந்த சனி மஹா பிரதோஷத்தில் கரும்புச்சாறு வாங்கி கொடுத்தால் உங்களுடைய கர்ம வினை தீரும். சனிதோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல சிவபெருமானுக்கு விபூதி, சந்தனம், பன்னீர் இந்த 3 பொருட்களையும் ஒன்றாக வாங்கி பிரதோஷ நாளில் தானம் கொடுத்தால் உங்களுடைய கஷ்டங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இது சித்திரை மாதம் மாம்பழம் சீசன். எல்லா இடங்களிலும் மஞ்சள் நிறத்தில் மாம்பழம் விற்கிறது.
இந்த மாம்பழத்தை வாங்கி நாளைய தினம் சிவபெருமானத்திற்கு அபிஷேகத்திற்கோ அல்லது அர்ச்சனைக்கோ, உங்கள் கையால் கொடுத்து பாருங்கள். வீட்டில் தடைபட்ட மங்கள காரியங்கள் எல்லாம் சீக்கிரம் நடக்கும் என்பதும் நம்பிக்கை. மா பலா வாழை முக்கனிகளும் இந்த சீசனில் கிடைக்கும். முக்கனிகளையும் வாங்கி சந்தோஷமாக சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்வது சிறப்போ சிறப்பு.
அடுத்தபடியாக பசும்பால் இளநீர் இதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். பசும்பால் இளநீரை விட அபிஷேகத்திற்கு மிஞ்சியது வேறு எதுவும் கிடையாது. இந்த இரண்டு பொருட்களையும் நீங்கள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வாங்கி கொடுங்கள். இதுபோக பச்சரிசி மாவு வாங்கி, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தால், கடன் சுமை குறையும். இது தவிர இன்னும் அபிஷேகத்திற்கு நிறைய பொருட்கள் இருக்கிறது.
வாய்ப்பு இருந்தால் உங்களால் எந்தெந்த பொருட்களை வாங்கி அபிஷேகத்திற்கு கொடுக்க முடியுமோ, அந்த பொருட்களை குருக்களிடம் கேட்டு வாங்கி கொடுத்து பலன் அடையாளம். ஏனென்றால் சில குறிப்பிட்ட பொருட்கள் நிறைய அபிஷேகத்திற்கு வரும். சில பொருட்களை மக்கள் வாங்கி கொடுக்கவே மாட்டார்கள். அந்த பொருட்கள் என்ன என்பதை குருக்களிடம் கேட்டு அதை நாம் வாங்கி கொடுத்தாலும் அதற்கு ஒரு தனி பலன் கிடைக்கும்.
சித்ரா பௌர்ணமி வருவதற்கு முன்பாக வரக்கூடிய இந்த சனி மகா பிரதோஷத்தில் ஈசனை கொஞ்சம் கடுமையாக வழிபாடு செய்யும் பட்சத்தில், நம்முடைய வரங்களை எல்லாம் சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும். கடுமையாக என்றால் ரொம்பவும் நம்மை வருத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சனிக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷம் நேரம். உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் இந்த ஒன்றரை மணி நேரமும், ஒரு சிவன் கோவிலில் அமர்ந்து நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, “ஓம் நமசிவாய” மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள். ஒன்றரை மணி நேரமும் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதற்காகவும் கஷ்டப்படத் தேவையில்லை. அந்த சிவபெருமான் உங்களுடைய கஷ்டங்களை எல்லாம் சுலபமாக தீர்த்து வைக்க ஒரு வழியை காட்டிக் கொடுப்பான்.
வேறு எந்த சிந்தனையும் மனதில் வரக்கூடாது. வாயிலிருந்து வேறு எந்த வார்த்தையும் வரக்கூடாது. வெறும் “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லுவது என்றால் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. கோவிலுக்கு சென்று இதை நீங்கள் செய்ய முடியும் என்றாலும் செய்யலாம், அல்லது வீட்டிலேயே அமர்ந்து அந்த ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலத்தில் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்வதாக இருந்தாலும் சொல்லலாம். கையில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொண்டு.
இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை வெற்றிலை பரிகாரம்
இவ்வளவுதாங்க இந்த சனி மகா பிரதோஷம் நாளில் மேல் சொன்ன விஷயங்களில் உங்களால் முடிந்த ஒரு எளிய விஷயத்தை பின்பற்றினால் கூட சிவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.