- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீண் விரயம் ஏற்படாமல் தடுக்கும் பரிகாரம்

வீண் விரயம் ஏற்படாமல் தடுக்கும் பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொருவருடைய வீட்டிலும் அந்த வீட்டை பாதுகாத்து வழிநடத்தி செல்வதற்கு என்று ஒருவர் இருப்பார். அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க செலவு செய்வார்கள். வீட்டிற்கு தேவையான செயல்களில் மட்டுமே பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தேவையற்ற வீண் செலவுகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அப்படி வீண் செலவுகள் ஏற்படும்பொழுது நம்முடைய தேவையை விட அதிகமாக பண விரயம் ஏற்படும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். இவை அனைத்தையும் நீக்க வேண்டும் என்றால் வீண் விரயத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். அப்படி கட்டுக்குள் வைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு மகாலட்சுமி பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த உலகத்தில் யார் தான் சம்பாதிக்காமல் இருக்கிறார்கள்? அனைவருமே ஏதாவது ஒரு தொகையை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தத் தொகை எந்த அளவிற்கு அவர்கள் கையில் இருக்கிறது என்பதுதான் விஷயமே. இதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது மகாலட்சுமியின் அருளே. மகாலட்சுமி தாயாரின் அருள் இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு சம்பாதிக்கும் பணம் என்பது அதிகரிக்கும் அப்படி சம்பாதித்த பணமும் வீண்விரயம் ஆகாமல் இருக்கும். அதனால் நாம் எந்த அளவிற்கு பணத்தை சம்பாதிப்பதற்காக மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறோமோ அதே போல் வீண்விரயம் எதுவும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். வீண் விரயத்தை குறைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை சப்தமி, நவமி, பௌர்ணமி போன்ற திதிகள் வரும் நாட்களில் செய்ய வேண்டும். அதுவும் இந்த மூன்று திதிகளும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் நாளில் செய்வது அதீத பலனை தரும். இதற்கு நமக்கு மஞ்சள் நிற பட்டு துணி வேண்டும். வழவழப்பான துணியை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு ஒரு கிழியாத நல்ல வெற்றிலை வேண்டும். ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் வேண்டும். கடைசியாக வன்னி மரத்தில் இருந்து ஒரு இன்ச் அளவிற்கு குச்சியோடு சேர்ந்த இலைகள் வேண்டும்.

மஞ்சள் துணியில் இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். குறைந்தபட்சம் டைமண்ட் கற்கண்டையாவது வைக்க வேண்டும். இப்பொழுது மகாலட்சுமி தாயாரிடம் வீண்விரயம் எதுவும் ஏற்படக்கூடாது, தேவையில்லாத செலவுகள் எதுவும் ஏற்படாமல் சேமிப்பாக உயர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த முடிச்சை வீட்டில் எந்த இடத்தில் பணத்தை வைக்கிறோமோ அந்த இடத்தில் வைக்கலாம். தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் வைக்கலாம், கடைகள் வைத்திருக்கிறோம் என்பவர்கள் கடையில் இருக்கக்கூடிய கல்லாப்பெட்டியில் வைக்கலாம். இப்படி நமக்கு எந்த இடத்தில் இருந்து பணவரவு வருகிறதோ அல்லது பணத்தை நாம் வைக்கிறோமோ அந்த இடத்தில் இந்த மூட்டையை வைத்து விட வேண்டும். இந்த மூட்டையை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மாற்றினால் போதும். மாற்றும் பொழுது அந்த நாணயத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் பொருட்களை ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிட்டு புதிதாக மறுபடியும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கர்மவினை கஷ்டங்கள் தீர பரிகாரம்

மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு நம்பி இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு வீண்விரயம் எதுவும் ஏற்படாது. பணவரவும் அதிகரிக்கும். முழு மனதுடன் செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்