நாளைய தினம் வைகாசி மாதத்தில் வந்திருக்கக்கூடிய பௌர்ணமி திதி. இந்த பௌர்ணமி திதியை மங்களவார பௌர்ணமி என்று சொல்லுகிறார்கள். காரணம் செவ்வாய்க்கிழமையில் இந்த பௌர்ணமி திதி வந்திருப்பது சிறப்பு. அதுமட்டும் அல்ல முருகப்பெருமான் அவதரித்தது வைகாசி மாத, பௌர்ணமி திதி விசாக நட்சத்திரத்தில் தான். இந்த மாதம் விசாக நட்சத்திரம் பௌர்ணமி திதியும் மாறி மாறி வந்திருந்தாலும், இந்த பௌர்ணமி திதிக்கு கொஞ்சம் கூடுதல் சிறப்பு இருக்கிறது.
இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான அம்மன் வழிபாட்டை பற்றியும், நம் மனதில் இருக்கக்கூடிய ஆசைகள் நிறைவேற செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
மனக்குழப்பம் அதிகமாக இருக்கிறது என்றால், பௌர்ணமி தினத்தில் நிலவு வெளிச்சத்தில் சிறிது நேரம் அமர வேண்டும் என்று சொல்லுவார்கள். அதிலும் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு நிலவு உதயமாகும் அல்லவா. அந்த சமயத்தில் அந்த அம்மன் கோவிலிலேயே நிலவு வெளிச்சத்தில் அமர்ந்தால் எவ்வளவு பெரிய மன குழப்பத்தில் நீங்கள் இருந்தாலும் அதை தெளிய வைக்கும் வேலையை அந்த சந்திர பகவானும் அம்பாளும் பார்த்துக் கொள்வார்கள். இது முதல் விஷயம்.
மனக்குழப்பம் தீர அம்மன் கோவிலுக்கு அல்லது வேறு ஏதாவது கோவிலுக்கோ பச்சரிசியையும் வெல்லமும் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பு. அம்மன் கோவில் உங்கள் ஊரில் இல்லை. உங்கள் வீட்டு பக்கத்தில் இல்லை என்றால், ஏதாவது ஒரு கோவிலில் அமர்ந்து சந்திர பகவானை தரிசனம் செய்யுங்கள். அவ்வளவு மன நிம்மதி கிடைக்கும்.
ஆசைகள் நிறைவேற பௌர்ணமி பரிகாரம்
பௌர்ணமி நாளில் கோவிலுக்கு செல்லும் போது ஒரு மஞ்சள் நிற பேப்பரையும், சிவப்பு நிற பேனாவையும் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். நிலவு வெளிச்சத்திலேயே அமர்ந்து அந்த காகிதத்தில் உங்களுடைய பிரச்சினைகளை எழுதலாம். உதாரணத்திற்கு, என்னுடைய கடன் சுமை தீர வேண்டும். கடன் தீர இரண்டு லட்ச ரூபாய் பணம் தேவை. இப்படி எழுதலாம். வீடு வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வீடு வாங்க நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்.
அதற்கு ஒரு நல்ல வேலை தேவை அல்லது நல்ல தொழில் அமைய வேண்டும், வருமானத்திற்கு வழி கிடைக்க வேண்டும், தொழிலில் லாபம் பெருக வேண்டும் இதுபோல உங்களுக்கு வேண்டிய ஏதாவது ஒரு வேண்டுதலை அந்த மஞ்சள் பேப்பரில் எழுதி, மஞ்சள் பேப்பரை மடித்து கையில் வைத்துக்கொண்டு நீங்கள் எந்த கோவிலில் இருக்கிறார்களோ அந்த பிரகாரத்தை 6 முறை வலம் வர வேண்டும்.
6 முறை வலம் வரும்போதும் அந்த காகிதத்தில் எழுதிய உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை எல்லாம் பௌர்ணமி நாளில் மாலை நேரத்தில் சந்திரன் உதயமான பிறகு தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மஞ்சள் பேப்பரை கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் ஏதாவது புத்தகத்திற்கு நடுவில் வைத்து மடித்து அலமாரியில் வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர வைகாசி விசாகம் தானம்
என்ன வேண்டுதல் வைத்தீர்களோ அந்த வேண்டுதல் நிறைவேறிய பின்பு, அந்த மஞ்சள் காகிதத்தை நெருப்பில் கொளுத்தி, சாம்பலை தண்ணீரில் கரைத்து விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். பார்ப்பதற்கு இது ஏதோ பைத்தியக்காரத்தனம் என்று சில பேர் நினைக்கலாம். ஆனால் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல், அந்த மஞ்சள் காகிதத்தில் எழுதிய வேண்டுதலானது, சீக்கிரம் பறித்து விடும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதை நீங்களும் முயற்சி செய்து பலன் அடையலாம்.