10 நிமிடத்தில் உங்களுடைய முகம் ஃபேஷியல் பண்ண மாதிரி அழகா மாறணுமா? வீட்டில் இருந்தபடியே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இன்ஸ்டன்ட் பேஷியல் செய்து கொள்வது எப்படி?

face2
- Advertisement -

எதிர்பாராமல் ஒரு முக்கியமான இடத்திற்கு வேலையாக்காகவோ, அல்லது விசேஷத்திற்காகவோ நாளைக்கு வெளியே கிளம்ப போறீங்க. ஆனா உங்க முகம் ரொம்ப டல்லா இருக்கு. ப்யூடி பார்லருக்கு போய் பேசியல் பண்ணிக்க டைம் கிடையாது. இன்ஸ்டன்டாக முகத்தை பளிச் பளிச்சென்று மாற்றுவதற்கு வீட்டில் இருந்தபடியே என்ன செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

face11

எந்தவித அலர்ஜியும் ஏற்படாமல், எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்க இந்த கிளேன்சிங், ஸ்க்ரப்பர், ஃபேஸ் பேக் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எப்பவுமே உங்களை இளமையான தோற்றத்துடன் வச்சுக்கணும்னு ஆசையா இருந்தா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.

- Advertisement -

Step 1:
முதலில் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு கிளன்சிங் செய்ய வேண்டும். எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். காய்ச்சாத பாலை காட்டனில் தொட்டு முகத்தை நன்றாக துடைத்து எடுத்துவிட்டு, அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும். உங்களுடைய முகத்தில் இருக்கும் அழுக்கு அனைத்தும் வெளியேறிவிடும். ரொம்பவும் ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் காய்ச்சிய பாலில் இருந்து பால் ஆடையோடு சேர்த்து பாலை எடுத்து முகத்தை க்ளென்சிங் செய்து கொள்ளலாம்.

face-wash

உங்களுக்கு ரொம்ப ஆயில் ஸ்கின் ஆக இருந்தா பால் பயன்படுத்த வேண்டாம். வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். முதலில் முகத்தை சுத்தம் செய்து விட்டீர்கள்.

- Advertisement -

Step 2:
இரண்டாவதாக முகத்தை ஸ்கரப் செய்ய வேண்டும். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் சர்க்கரை, 1 ஸ்பூன் தேன் ஊற்றி கலந்து அந்த கலவையை முகத்தில் ஜென்டிலாக 5 நிமிடம் மசாஜ் செய்து ஸ்க்ரப் செய்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் அலம்பி விடுங்கள். முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி முகம் இப்போது பளிச்சென்று இருக்கும். (இந்த ஸ்கரப்பரை உங்களுடைய கை கால்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். கை கால்களில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி பார்ப்பதற்கு பளிச்சென்று அழகாக இருக்கும்.)

face7

Step 3:
அடுத்து முகத்திற்கு சிம்பிளான ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். கொஞ்சமாக கோதுமை மாவில் தேவையான அளவு தேன் ஊற்றி நன்றாக கலந்து, முகத்தில் கீழ் இருந்து மேல் பக்கமாக அப்ளை செய்து 15 லிருந்து 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை 5 நிமிடம் மசாஜ் செய்து கழுவி விட வேண்டும். முகத்தை மசாஜ் செய்யும்போது கையைக் கீழே பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

face4

சிலபேருக்கு தேன் முகத்தில் போடுவதற்கு பயம் இருக்கும். உங்களுக்கு தேனை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் தேனிற்கு பதிலாக தண்ணீரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது பால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தேன் போடுவது மூலம் முகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேல் சொன்ன விஷயங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை நம்முடைய முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். இளமையும் அழகும் ஆரோக்கியத்தோடு இருக்கும்.

- Advertisement -