இன்றைய பெரும்பாலான வீடுகளில் இட்லி தோசை மாவு வைத்து தான் காலமே ஓடுகிறது சில நேரங்களில் அதுவும் இல்லாமல் போகும் போது என்ன செய்வது என்று பெரிய குழப்பமே ஆகி விடும். டிபன் வகைகள் என்று எடுத்துக் கொண்டால் எத்தனையோ இருக்க தான் செய்கிறது. ஆனாலும் என்ன வோ நமக்கு இந்த இட்லி தோசை மட்டும் தான் அவசரத்தில் கை கொடுக்கும். இனி மாவு இல்லாத சமயத்திலும் சட்டு என்று மாவை தயார் செய்து தோசை ஊற்றி கொள்ளலாம். அந்த தோசை மாவு எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு தான் இது.
இன்ஸ்டன்ட் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 1கப், அவல் – 1/2 கப், தயிர் -1/2 கப், தேங்காய் பால் – 1/4 கப், சமையல் சோடா – 1/4 டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
இன்ஸ்டன்ட் தோசை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பவுலில் ஒரு கப் ரவையும், அரை கப் அவலையும் ஒன்றாக சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவல் மெலிதாக இருக்கும் வெள்ளை அவலை தான் பயன்படுத்த கொள்ளுங்கள், சிகப்பு அயல் பயன்படுத்தக் கூடாது.
பத்து நிமிடம் கழித்து அவலும் ரவையும் நன்றாக ஊறி தண்ணீர் முழுவதுமாக ஊறி இருக்கும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைக்க வேண்டும். அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றி தான் அரைக்க வேண்டும். தேங்காய்ப் பால் நல்ல திக்கான பாலாக இருக்க வேண்டும்.
இப்போது தேங்காய் பால் ஊற்றி அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இத்துடன் அரைக் கப் தயிர், சமையல் சோடா, உப்பு அனைத்தையும் சேர்ந்து நன்றாக அடித்து ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து விடுங்கள். தயிரும் சமையல் சோடாவும் சேர்க்கும் போது மாவு நன்றாக புளித்து இருக்கும்.
பத்து நிமிடம் கழித்து அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து கல் நன்றாக சூடு ஏறியதும் மாவை எடுத்து ஊற்றுங்கள். கல் நன்றாக சூடு ஏறி இருந்தால் தான் இந்த தோசை சரியான பக்குவத்திற்கு வரும். தோசை ஊற்றி கொஞ்சம் எண்ணெய் சுற்றிலும் ஊற்றி பிறகு தட்டு போட்டு மூடி வேக விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். மாவை ஊற்றியதும் மேலே புள்ளி புள்ளி எழும்பி வர வேண்டும் அது தான் சரியான பதம்.
இதையும் படிக்கலாமே: டீக்கடை மசால் போண்டா 10 நிமிடத்தில் எளிதான முறையில் வீட்டில் எப்படி செய்வது? இது தெரிஞ்சா இனி கடையில போய் வாங்கவே மாட்டீங்களே!
இது நம் வீட்டில் செய்யும் கல் தோசை போலவே ஆனால், அதை விட நல்ல சாஃப்ட்டாக சாப்பிட ருசியாக இருக்கும் .இதற்கு கார சட்னி, பூண்டு சட்னி, தக்காளி சட்னி என இப்படி காரமாக ஏதாவது ஒரு சட்னியை சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.