ஓடும் ஆற்றில் தோன்றிய 1000 லிங்கங்கள். ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்

siva lingam

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிர்ஷி தாலுக்காவில் ஓடும் ஆற்றின் பெயர் சல்மாலா. வற்றாமல் ஓடும் இந்த ஆற்றின் நீரை நம்பி அங்கு பல்லாயிரம் மக்கள் வாழ்கின்றனர். இதை வெறும் சாதாரண ஆறு என்று நினைத்த மக்களுக்கு 1969 ஆண்டு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

salmaala river linga

வறட்சி காரணமாக கடந்த 1969 ஆண்டு இந்த ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. அப்போது அதன் மையப்பகுதியில் இருந்து பல அதிசயங்கள் வெளிவர ஆரமித்தன.

முதலில் ஆங்காங்கு சில பாறாங்கற்கள் தெரிய ஆரமித்தது. அந்த பாறாங்கற்களை உற்று நோக்குகையில் பல்லாயிரம் லிங்கங்கள் தெரிய ஆரமித்தன. அதோடு ஒவ்வொரு லிங்கத்திற்கும் அருகே நந்தியின் சிலையும் வடிக்கப்பட்டிருந்தன.

எப்போதும் வற்றாமல் ஓடும் இந்த ஆற்றில் ஆயிரக்கணக்கில் லிங்கங்கள் வடிப்பதென்பது அறிவியலுக்கு எட்டாத ஒரு விடயம். அப்படி இருக்கையில் அங்கு எப்படி இவளவு லிங்கங்கள் வடிக்கப்பட்டது? அதை யார் வடித்தார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆராய்ச்சியாளர்களால் இதுவரை அறியமுடியவில்லை.

ஒரு காலத்தில் இந்த பகுதி சிற்பக்கலை கூடமாக இருந்திருக்கலாம் என்றும், நதியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு அந்த கலைக்கூடம் ஆற்றில் மூழ்கி இருக்கக்கூடும் என்றும் ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். அனால் இவை அனைத்தும் வெறும் யுகமே தவிர அதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

எப்படி இருந்தாலும் நந்தியோடு ஆயிரக்கணக்கில் லிங்கங்கள் செதுக்குவதென்பது சாதாரணம் இல்லை. அந்த மாபெரும் சிற்பிகளின் திறன் நிச்சயம் பாராட்டத்தக்கது.