- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 29 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 29 ஜூன் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். இந்த வாரத்தின் துவக்க நாளே உங்கள் மனது நிறைந்து இருக்கும். வேலையிலும் பெருசாக பிரச்சனைகள் வராது. உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். வரும் வருமானத்தில், சேமிப்பதில் ஆர்வம் காட்டுங்கள். செலவை குறைப்பது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலை சரியாகும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீங்கள் இழுந்த சொத்தை மீட்பதற்கு உண்டான வழி கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இறைவழிபாடு செய்வது வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மன நிறைவை தரும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப ஓய்வு கிடைக்கும். முதியவர்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்தையும் சுமூகமான போக்கு நிலவும். கடன் சுமை குறையும். தேவையில்லாமல் உங்கள் மீது விழுந்த பழி விலகும் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. தீராத பகை விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன உளைச்சல் நீங்கும். தேவையற்ற சிந்தனைகள் விலகும். பகை விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் புது அனுபவங்களை கொடுக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். சுப காரியத்தடை விலகும் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திறமைசாலியாக வலம் வருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். கடன் சுமையிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக இருப்பீங்க. உங்களுக்கு நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். தெளிவான சிந்தனையோடு செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் சரியாகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் அசதி வரும். நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தை சரிவர பார்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் சீராக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த வாக்குவாதங்கள் சரியாகும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் அசதி ஏற்படும்.

சற்று முன்