- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval12-05-2025 சித்ரா பௌர்ணமி மகாலட்சுமி மந்திரம்

12-05-2025 சித்ரா பௌர்ணமி மகாலட்சுமி மந்திரம்

- Advertisement -

நாளைய தினம் 12.5.2025 திங்கள்கிழமை சித்ரா பௌர்ணமி திதி வந்திருக்கிறது. அந்த சந்திர பகவானின் தரிசனத்தில், பின் சொல்ல கூடிய எளிமையான பரிகாரத்தை எவர் ஒருவர் நாளைய தினம் செய்கிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில் அடுத்த ஒரு வருடத்திற்கு பணத்திற்கான கஷ்டம் வராது. கேரண்டியாக சொல்லலாம். காரணம் இந்த நிலவு வெளிச்சத்தில் நாம் எந்த பரிகாரத்தை செய்தாலும் அது 100% நமக்கு வெற்றியைத் தரும். 100% பலனை கொடுக்கும்.

எனக்கு வாழ்க்கையில் பணத்தால் ரொம்ப கஷ்டம் இருக்கிறது. கடன் சுமை அதிகம் இருக்கிறது. அந்த மகாலட்சுமி நான் கூப்பிட்ட குரலுக்கு வர வேண்டும். என் பண பிரச்சனையை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என்றால், என்ன செய்வது. நாளைய தினம் நிலவு வெளிச்சத்தில் இந்த ஒரு பொருளை கையில் வைத்துக் கொண்டு, இந்த ஒரு மந்திரத்தை சொல்லுங்கள் போதும். இந்த வருடம் முழுவதும் மகாலட்சுமி தாய், உங்கள் நிதி நிலைமையை சீர் செய்ய உங்களோடு துணையாக வருவாள்.

- Advertisement -

நல்லதாக ஒரு முத்து எங்கு கிடைக்கும் என்று பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். நிறைய பணம் செலவு செய்ய சொல்லவில்லை. இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு உங்கள் உள்ளங்கைகளில் ஒரு முத்து இருப்பது சிறப்பு. நாளை மாலை சந்திரன் உதயமான பிறகு வெட்ட வெளியான இடத்தில் அமர்ந்து உங்களுடைய உள்ளங்கைகளில் இந்த முத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் உள்ளங்கை திறந்தபடியே இருக்கட்டும். அந்த நிலவின் வெளிச்சத்தை, முத்து தன்னுள்ளே ஈர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு உள்ளங்கைகளை மூடிக்கொண்டு மகாலட்சுமியை மனதார நினைத்து பின் சொல்லக்கூடிய இந்த மகாலட்சுமி வசிய மந்திரத்தை எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்லலாம்.

- Advertisement -

சாதாரண நாளில் இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னால், ஒரு முறை உச்சரித்த பலன் தான் கிடைக்கும். அதுவே சித்ரா பௌர்ணமி நாளில் நிலவு ஒளியில் இந்த மந்திரத்தை ஒருமுறை சொன்னால், 1000 முறை உச்சரித்த பலன் உங்களுக்கு கிடைக்கும். மந்திரத்தை எத்தனை முறை உச்சரிப்பது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். நாளைய தினம் நிலவு வெளிச்சத்தில் உச்சரிக்க வேண்டிய மகாலட்சுமி வசிய மந்திரம் இதோ

மகாலட்சுமி வசிய மந்திரம்

ஓம் ஸ்ரீயை மகாலட்சுமி வசி வசி நம !

- Advertisement -

இந்த மந்திரத்தை தான் நாளை உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கூட கிடையாது. உங்களுக்கு மகாலட்சுமியின் வசியம் மந்திரம் வேறு ஏதாவது தெரிந்தால் கூட அந்த மந்திரத்தை உச்சரித்து, நீங்கள் அந்த மந்திரத்தை நாளைய தினம் சித்தி செய்து வைத்துக் கொள்ளலாம். மந்திரத்தை உச்சரித்துவிட்டு உள்ளங்கைகளில் இருக்கும் அந்த முத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதெல்லாம் உங்களுக்கு பணம் தேவைப்படுகிறதோ, எப்போதெல்லாம் உங்களுக்கு பண பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் அந்த முத்தை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு நீங்கள் நிலவு வெளிச்சத்தில் உச்சரித்த, அதே மந்திரத்தை உச்சரிக்க மகாலட்சுமி நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவி செய்வாள். இதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் சூட்சமம்.

இந்த ஒரு வருடம் முழுவதும் அந்த முத்தில் இருக்கும் பவர் உங்களுக்கு வேலை செய்யும். இது வெறும் மகாலட்சுமி வசியத்திற்கு மட்டும்தானா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. வேறு ஏதாவது மந்திரத்தை நீங்கள் சித்தி செய்து கொள்ள வேண்டும். வேறு ஏதாவது இறைவன் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வர வேண்டும், உங்களுடைய வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்றாலும், இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த இறைவனுக்கு உண்டான ஒரு சக்தி வாய்ந்த பொருளை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளலாம். (முத்து உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் 1 ரூபாய் நாணயம் 5 ரூபாய் நாணயத்தை வைத்து கூட இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்).

இதையும் படிக்கலாமே: குருபெயர்ச்சி ராசிபலன் 2025

உதாரணத்திற்கு வாராகியை நீங்கள் வழிபட வேண்டும் என்று நினைத்தால் கையில் விரலி மஞ்சள் வைக்கலாம். முருகரை வழிபாடு செய்ய வேண்டும் என்றால் கையில் ஒரு சந்தன கட்டையை வைத்துக் கொள்ளலாம். இது போல உங்கள் விருப்பப்படி இந்த வழிபாட்டை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். நாளை சக்தி வாய்ந்த இந்த நாளில் உங்களது கஷ்டத்தை தீர்க்க வந்திருக்கும் ஆன்மீகம் பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்