- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 04 ஆகஸ்ட் 2026

இன்றைய ராசிபலன் – 04 ஆகஸ்ட் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் இருக்கும். எதிரிகளை சமாளிக்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் துவண்டு போகக்கூடாது. எதிர்த்து போராடும் தைரியம் தேவை. துணிச்சல் தேவை. அப்போதுதான் இந்த நாளில் வெற்றி பெற முடியும். இறை நம்பிக்கை வையுங்கள். விடாமுயற்சியை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் இருக்கட்டும். மூன்றாவது நபரை நம்பி உங்களுடைய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வேலையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வாடிக்கையாளரோடு நிதானமாக பேசுவது நல்லது. மாணவர்கள் தேவையில்லாத நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது. நிதானதோடு சிந்தித்து செயல்படுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். தேவையில்லாத மன குழப்பம் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சொத்து பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள் சுப செலவுகள் ஏற்படும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் அதிகமாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். தந்திரமாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தேவையில்லாத எதிரிகள் தானாக உங்களை விட்டு விலகுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் நீங்கள் விட்ட இடத்தை பிடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். தேவைக்கு அதிகமாகவே பணம் கையில் இருக்கும். புதிய முதலீடு செய்யலாம். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத செலவை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வேலையில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத சிந்தனையால் நேரம் வீணாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற குழப்பங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம். எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று சொல்லி, வரக்கூடிய பிரச்சனையிலிருந்து உடனடியாக வெளியேறிவிட வேண்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. முன் கோபத்தால் சின்ன சின்ன இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோபத்தை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். உயரதிகாரிகளோடு அனுசரணையாக பேசுவது நல்லது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வரும் வாய்ப்புகளை கை நழுவ விட வேண்டாம். வியாபாரத்திலும் நிதானம் தேவை. வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தீராத குழப்பங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். காரிய தடை விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சக மாணவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் புது உறவுகள் சேர நல்ல காலம் கைகூடி வரும். திருமண தடை விலகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்த உடனேயே அதில் வெற்றி அடைய முடியாது. நிறைய பேருடைய விமர்சனத்திற்கு ஆளாக கூடிய வாய்ப்புகள் உள்ளது. எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்களுடைய கடமையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பலருடைய பேச்சுக்கு செவிசாய்க்க வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். பயணங்களால் சில பேருக்கு அலைச்சல் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்பின் அறிமுகம் ஆகாத மனிதர்களோடு பேசும்போது கவனம் இருக்கட்டும்.

சற்று முன்