இன்று 3 – 4 – 2025 வியாழக்கிழமை நாளில் வளர்பிறை சஷ்டி திதி வந்திருக்கிறது. இது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை. இந்த நாளில் வளர்பிறை சஷ்டி வந்திருப்பது இரட்டிப்பு பலன். முருகனை மனதார நினைத்தாலே நம்முடைய வாழ்வில் இருக்கும் துன்பங்கள் நீங்கும் என்று சொல்வார்கள். அதிலும் அவரவர் ராசிக்கு உகந்த அறுவடை வீட்டு முருகனை மனதில் நினைத்தால், சொல்லவே வேண்டாம்.
உங்களுடைய கஷ்டங்கள் இன்றோடு உங்களை விட்டு நிரந்தரமாக விலகி விடும். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிக்காரர்களும் அறுபடை வீடுகளில் எந்த முருகரை மனதார நினைத்து இன்றைய தினத்தில் வழிபட வேண்டும், நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட இந்த முருகன் கோவிலுக்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு முறை சென்று, அந்த முருகனை தரிசித்து விட்டு வாருங்கள். வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல திருப்புமுனைகள் அமையும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் பழனி பால தண்டாயுதபாணியை வழிபாடு செய்வது உங்களுக்கு அதிசிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். இன்றைய தினம் பழனி பால தண்டாயுதபாணி பழனி முருகனை மனதார நினைத்து, முடிந்தால் பழனி முருகனை ஏதாவது ஒரு புகைப்படத்தின் மூலம், இரண்டு கண்குளிர பார்த்து “பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா” என்று சொல்லிப் பாருங்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசை, நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த நல்லது உங்கள் வாழ்வில் இன்று நடக்கும். பழனி இருப்பது திரு ஆவினனங்குடியில். இது செவ்வாய்க்கு உரிய ஸ்தலம். இந்த கோவிலுக்கு நீங்கள் ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை சென்று வருவது அபரிவிதமான பலனை கொடுக்கும்.
ரிஷபம் மற்றும் துலாம்
நீங்கள் இன்றைய தினம் திருத்தணி முருகன் மனதார நினைத்து வழிபட வேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு புகைப்படத்தின் மூலம் திருத்தணி முருகனை ஒரு முறை பார்க்கும் போதே, உங்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டு ஓடி வரும். வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் ஒரு வெள்ளிக்கிழமை திருத்தணி முருகனை சென்று தரிசனம் செய்யுங்கள். இன்று திருத்தணி முருகனையும், வள்ளியம்மையையும் நினைத்து இந்த பாடலை படித்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்.
பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
மிதுனம் மற்றும் கன்னி
வள்ளி தெய்வானையோடு முருகர் பழமுதிர்ச்சோலையில் காட்சி தருகின்றார். உங்களுக்கு இந்த கோவில் தான் சிறப்பு. இன்று நீங்கள் பழமுதிர்ச்சோலை முருகனை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். “பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா” இன்று மூன்று முறை சொல்லிப் பாருங்களேன். இதுவரை உங்கள் வாழ்வில் நடக்காத நல்லது கூட இன்று நடக்கும்.
கடகம் மற்றும் சிம்மம்
கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசி படி சுவாமிமலை முருகனை சென்று தரிசனம் செய்ய வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள், திருத்தணி மலைக்குச் சென்று திருத்தணி முருகனையும் ஒரு முறை தரிசனம் செய்து வருவது சிறப்பு. “சுவாமிமலை முருகனுக்கு அரோகரா” என்று இன்று 6 முறை சொல்லித்தான் பாருங்களேன்.
மகரம் மற்றும் கும்பம்
முருகன் தெய்வானையை மணந்து கொண்ட இடம் திருப்பரங்குன்றம். நீங்க திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். இன்றைய தினம் திருப்பரங்குன்றத்து முருகனை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டால் உங்களுடைய பிரார்த்தனை உடனடியாக நிறைவேறும். உங்களுக்கு உடனே நல்லது நடக்கும். “திருப்பரங்குன்றத்து முருகா உன்னை நான் சரண் அடைந்தேன்” என்று 11 முறை சொல்லித்தான் பாருங்களேன். இன்று வாழ்க்கையில் நம்ப முடியாத அதிசயம் உங்களுக்கு நடக்கும்.
தனுசு மற்றும் மீனம்
இந்த இரண்டு ராசிக்காரர்களும் இன்றைய தினம் திருச்செந்தூர் முருகனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். வியாழக்கிழமை யோடு வளர்பிறை சஷ்டி தினம் என்று. முருகனை நீங்கள் வழிபாடு செய்தால் உங்கள் வாழ்வையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். “திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா” என்று ஒரே ஒரு முறை சொல்லுங்கள். இந்த நாளை நீங்கள் மட்டும் தவற விடவே கூடாது.