மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாளாக அமையப் போகிறது. நீண்ட நாள் கனவு நிறைவேறும். நீங்கள் எதிர்பாராத நல்ல விஷயம் ஒன்று, உங்கள் வாழ்வில் இன்று நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வரும் வாய்ப்புகளை வேண்டாம் என்று தட்டிக் கழிக்காதீர்கள். வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளின் மூலம் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய பேச்சுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. இதுநாள் வரை கைக்கு வந்து சேராமல், இழுபறியாக இருந்த பணம், உங்கள் கையை வந்து சேரும். நிதிநிலைமை சீராகும். உங்கள் கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மனதிற்குள் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் ஒவ்வொன்றாக சரியாகும். இறைவனின் மீது பாரத்தை போட்டு விட்டு உங்களுடைய கடமையில் மட்டும் கவனத்தோடு செயல்படுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். எதிரி தொல்லைகள், அக்கம் பக்கம் வீட்டாருடன் வாக்குவாதம், ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது நபர்களிடம் பேசும் போது, கவனத்தோடு பேச வேண்டும். வீண் பஞ்சாயத்திற்கு செல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொண்டால், இந்த நாள் இனிய நாளாக அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். ஆனால் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை இறைவன் உடனடியாக உங்களுக்கு கொடுத்து விடுவான். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், புது முடிவுகளை எடுக்கலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். லாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய சேமிப்பை உயர்த்துவதற்கு புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று திறமைசாலிகளாக இருப்பீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி தரும். நல்ல செய்தி செவிகளில் விழும். மனதில் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த மன பாரம் குறையும். பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். நிம்மதியான வாழ்க்கையை, இந்த இனிய நாள் உங்களுக்கு கொடுக்கும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களால் இயன்ற அளவு முயற்சிகளை, முதலீடாக போடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேறுவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல வெற்றியை கொடுக்கும். தீரா பகையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். வேலை வியாபாரத்தில் முடிவுகள் எடுக்கும் போது அவசரம் வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிக எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. புது முதலீடுகளை செய்ய வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். சின்ன சின்ன ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை. இறைவழிபாடு செய்யுங்கள் தேவையில்லாமல் மனதை அலைபாய விட வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். குடும்ப உறவுகளை விட்டு கொஞ்சம் தூரம் பிரிந்து செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் இறைவன் உங்களை கைவிட மாட்டான். பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியத்தை கொடுப்பான்.