12 ராசிகளுக்கான மகா சக்தி பெற்ற 1 வரி மந்திரங்கள் இதோ! இதை உச்சரித்தால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

astro-mantra

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். உதாரணத்திற்கு மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக சில குணங்களை ஒரே மாதிரியாக கொண்டு இருப்பார்கள். ஆனால் மேஷ ராசிக்காரர்களுக்கும், ரிஷப ராசிக்காரர்களுக்க்கும் வெவ்வேறு குணங்கள் இருக்கும். மனிதனுக்கு மனிதன் நிச்சயம் வித்தியாசப் படுகிறான். ஒரே மாதிரி குணத்துடன் யாரும் இருப்பதில்லை. இப்படியாக பிரிக்கப்பட்ட மனிதர்களுக்கு தங்களின் ராசிக்கு ஏற்ப இந்த பீஜ மந்திரத்தை உச்சரிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனியான பீஜ மந்திரங்கள் என்ன? அவற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் பெறும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

astro wheel 1

சிலருக்கு சொல்புத்தி இருக்கும், சிலருக்கு சுயபுத்தி இருக்கும், சிலருக்கு இது இரண்டுமே இல்லாமல் இருக்கும். சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை என்று இருக்கும் இப்படியான நபர்களுக்கு எல்லா முயற்சிகளும் தோல்வியை தான் கொடுக்கும். ‘கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு’ என்கிற பழமொழிக்கு ஏற்ப இந்த உலகில் கற்றுக்கொள்ள வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. நமக்கு எல்லாம் தெரியும் என்கிற நினைப்பு யாருக்கும் வந்துவிடக் கூடாது. அத்தகைய நம்முடைய அறிவையும், ஞான வழியில் செலுத்துவதற்கு மந்திரங்கள் துணை புரிகின்றன.

செய்த தவறுகளுக்காக உண்மையிலேயே மனம் வருந்துபவர்களுக்கு இறைவனிடத்தில் நிச்சயம் மன்னிப்பு உண்டு. அத்தகைய மன்னிப்பு வேண்டுபவர்களும், வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்களும், தன்னுடைய அறிவை பெருக்கிக் ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த மந்திரங்கள் அந்தந்த ராசிக்காரர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஒவ்வொருவரும் தங்களுடைய ராசிக்கான பீஜ மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்க வேண்டும். நீங்கள் இதை இந்த காலத்தில் தான் உச்சரிக்க வேண்டும் என்கிற எந்த வரைமுறையும் இல்லை. உங்களுக்கு எப்பொழுது நேரம் இருந்தாலும் இந்த மந்திரத்தை மட்டும் தொடர்ந்து உச்சரியுங்கள். வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கூட தாராளமாக இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே செய்யலாம். சரியான ராசியினர் தங்களுடைய மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் அவர்களுடைய ஆரா சக்தி தூண்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் நிச்சயம் நல்ல அதிர்வலைகள் உண்டாகும். தீயவைகள் விலகி நல்லவைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

மேஷம்
Mesham Rasi
ஓம் ஐம் க்லீம் சௌம்!!

ரிஷபம்
Taurus zodiac sign
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்!!

மிதுனம்
Gemini zodiac sign
ஓம் க்லீம் ஐம் சௌம்!!

கடகம்
Kadagam Rasi
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்!!

சிம்மம்
Leo zodiac sign
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்!!

கன்னி
kanni
ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்!!

துலாம்
Thulam Rasi
ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்!!

விருச்சிகம்
Scorpius zodiac sign
ஓம் ஐம் க்லீம் சௌம்!!

தனுசு
dhanusu
ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்!!

மகரம்
Magaram rasi
ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்!!

கும்பம்
Kumbam Rasi
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம்!!

மீனம்
meenam
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்!!

மேற்கண்ட 12 ராசிகளுக்கும் உரிய மந்திரத்தை சரியாக உச்சரித்து நிறைய நன்மைகள் வாழ்வில் கிடைக்கப் பெற்று பயன் பெறுங்கள்.