12 ராசியினரும் தீபாவளி அன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்

“தீபாவளி” என்பது தீமைகள் அழிந்து நன்மைகள் தழைத்தோங்கச்செய்யும் ஒரு திருநாளாகும். இந்த விழா நமது மனத்திலும், வாழ்விலும் இருக்கின்ற இருளை போக்கி வெளிச்சத்தை தரும் விழாவாகவும் இருக்கிறது. இந்த தீபாவளி திருநாளில் 12 ராசியினரும் சில பரிகார முறைகளை செய்வதன் மூலம் தங்கள் வாழ்வில் எப்போதும் நன்மைகளையும், பொருளாதார முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டாங்களையும் பெற முடியும் அப்பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

Mesham Rasi

மேஷ ராசியினர் தீபாவளி நாளிலிருந்து உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட ஒரு புது வெள்ளை துணியின் ஒரு சிறு பகுதியை குங்குமப்பூ அல்லது சந்தன கரைசலில் நனைத்து எடுத்து, உங்கள் பணம் வைக்கும் பெட்டி, பை, அலமாரி போன்றவற்றில் வைத்துகொள்வதால் நன்மைகள் அதிகம் ஏற்படும்.

ரிஷபம்

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசியினர் தீபாவளி நாளிலிருந்து உங்கள் வாழ்வில் பல அதிர்ஷ்டங்களை, செல்வ செழிப்புகளும் ஏற்பட இரண்டு அகல்விளக்குகளில் நெய்யை ஊற்றி, இரண்டு விளக்குகளில் இருக்கும் திரியை ஒன்றாக திரித்து, ஒரே தீபமாக விளக்கேற்றி உங்களின் மனவிருப்பங்களை வேண்டிக்கொள்வதால் நீங்கள் விரும்பிய நற்பலன் அனைத்தும் கிடைக்க பெறுவீர்கள்.

மிதுனம்

midhunam

மிதுன ராசியினர் தீபாவளி திருநாள் முதல் தங்களின் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், செல்வ சேர்க்கைகளையும் பெற ஒரு முடியுள்ள தேங்காயை கையில் வைத்துக்கொண்டு லட்சுமி தேவியிடம் உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்ட பிறகு அந்த தேங்காயை ஒரு சிவப்பு நிற துணியில் சுற்றி வீட்டில் ஒரு பாத்திரமான இடத்தில் வைத்து விட வேண்டும். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு அந்த தேங்காயை லட்சுமி கோவிலில் வைத்து விட வேண்டும்.

கடகம்

Kadagam Rasi

கடக ராசியினர் தீபாவளி முதல் தங்களின் வாழ்வில் சிறப்பான நன்மைகள் பெறுவதற்கு அருகிலுள்ள பெருமாள் கோவிளுக்கு விழாக்காலங்களில் கோவிலில் ஏற்றப்படும் கொடியை தானமளிப்பது மிகுந்த நன்மைகள், அதிர்ஷ்டங்கள் போன்றவற்றை உண்டாக்கும். பொருள் வரவும் அதிகரிக்கும்.

சிம்மம்

simmam

சிம்ம ராசியினர் தீபாவளி திருநாள் முதல் தங்களின் வாழ்வில் பல அதிர்ஷ்டங்களையும், செல்வ வளங்களையும் பெறுவதற்கு தங்கள் வீட்டு வாசலில் ஒரு பெரிய விளக்கில் நெய் ஊற்றி, திரிபோட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அந்த தீபம் மறுநாள் அதிகாலை வரை அணையாமல் எரியுமானால் உங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படுவதற்கான அறிகுறியாக அதை கருதலாம்.

கன்னி

Kanni Rasi

கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் மங்கல தினமான தீபாவளி முதல் நன்மைகளும், செல்வ வளங்களும் பெருகுவதற்கு தீபாவளி அன்று தங்களின் பணம் வைக்கும் இடத்தில் ஒரு சீத்தா பழத்தை சிவப்பு நிற துணியில் முடிந்து வைக்க வேண்டும். கொஞ்ச நாட்கள் அப்பழத்தை அங்கேயே வைத்திருந்து, அது அழுக ஆரம்பித்தவுடன் உங்கள் வீட்டில் வளரும் துளசி செடிகருகில் புதைத்து விட வேண்டும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் தீபாவளி திருநாள் தொடங்கி எப்போதும் நண்மைகளும், சிறந்த பொருள்வரவும் பெறுவதற்கு தாமரை விதை மாலையை தீபாவளி அன்று மகாலட்சுமி கோவிலில் லட்சுமி சிலையின் காலடியில் வைத்து வணங்க பொருளாதார ரீதியில் சரிப்பான வளர்ச்சியை காண்பீர்கள்.

விருச்சிகம்

Virichigam Rasi

விருச்சிக ராசியினர் தீபாவளி தினம் முதற்கொண்டு தங்களின் வாழ்வில் எப்போதும் அதிர்ஷ்டங்களையும், சிறந்த பொருள் வரவையும் பெறுவதற்கு தீபாவளி தினத்தில் எதாவது ஒரு கோவிலுக்கு சென்று இரண்டு வாழை மர கன்றுகளை நட்டு, அது வளர்ந்து குலை தள்ளி பழங்கள் தரும் வரை கவனமாக வளர்த்து, பராமரித்து வர வேண்டும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசியினர் தங்களின் வாழ்நாளில் தீபாவளி தினம் முதற்கொண்டு எப்போதும் அதிர்ஷ்டங்களும், பொருளாதார வளங்களையும் பெறுவதற்கு, தீபாவளி அன்று ஒரு வெற்றிலையில் குங்குமத்தை கொண்டு உங்களுக்கு தெரிந்த செல்வ மந்திரத்தை எழுதி, உங்கள் பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் காலை அந்த வெற்றிலையை ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும்.

மகரம்

Magaram rasi

மகர ராசியினர் தங்களின் வாழ்நாளில் எப்போதும் அதிர்ஷ்டங்களையும், செல்வ வளங்களையும் பெறுவதற்கு தீபாவளி அன்று ஒரு சீத்தாப்பழத்தை சிவப்பு துணியால் முடித்து உங்கள் பணம் வைக்கும் பீரோவில் வைத்து, மறுநாள் காலை ஒரு குரங்கு அல்லது பசுமாட்டிற்கு அப்பழத்தை உணவாக உண்ண கொடுத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும்.

கும்பம்

Kumbam Rasi

கும்ப ராசியினர் தங்களின் வாழ்வில் தீபாவளி நாள் முதல் சிறப்பான பலன்களையும் சிறந்த பொருளாதார முன்னேற்றங்களையும் பெற, தீபாவளி அன்று ஒரு கொட்டாங்குச்சியில் நெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி உங்கள் வீட்டில் வைப்பதால் வீட்டில் பொருள்வரவு பல மடங்கு அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தும்.

மீனம்

Meenam Rasi

மீன ராசியினர் தங்களின் தீபாவளி நாள் முதல் தங்களின் வாழ்வில் சிறப்பான பல நற்பலன்களை பெறுவதற்கும், பொருளாதார ரீதியில் சிறந்த முன்னேற்றங்களை அடையவும் தீபாவளி நாள் முதல் ஒவ்வொரு முறை நீங்கள் லட்சுமி கோவிலுக்கு சென்று வழிபாடும் போது நறுமணமிக்க ஊதுபத்திகளை கொளுத்தி வைத்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு பொருளாதார ரீதியான பல சிறப்பான பலன்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உலகம் போற்றும் தொழிலதிபர் ஆவது யார்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi deepavali worship in Tamil.