உலகம் போற்றும் தொழிலதிபர்கள் ஆவது யார்? – ஜோதிட ரீதியிலான விளக்கம்

own-business

“உழைப்பு உயர்வு தரும்” என்பது பழமொழி. நமக்கு வருவாய் அளிக்க கூடிய எந்த ஒரு வேலையிலும் உயர்வு, தாழ்வு பார்ப்பது பேதமை ஆகும். நமது நாட்டில் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் மாத சம்பளக்காரர்களாக கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கும் நல்ல ஊதியம், சலுகைகள் போன்றவை கிடைத்தாலும், இன்னொருவரின் அதிகாரத்திற்கு கீழ் தான் பணிபுரிய வேண்டியிருக்கிறது என்ற எண்ணம் எழாமல் இருந்திருக்காது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் அடிமையை போன்று பணிபுரிந்து கொண்டிருப்பாரா அல்லது அவராலும் பலருக்கு வேலை வழங்கும் பெரும் தொழிலதிபர் ஆக முடியுமா என்பதை குறித்து ஜோதிட ரீதியான பலன்களை இங்கு பார்க்கலாம்.

Sani Astrology

ஒரு நபர் எப்படிப்பட்ட வேலை செய்வார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய கிரகமாக “சனி” கிரகம் இருக்கிறது. “மகரம், கும்பம்” போன்ற ராசிகளில் பிறந்தவர்கள் மற்றும் ஜாதகத்தில் சனி பகவான் உச்சமடையும் ராசியான “துலாம்” ராசியில் சனி கிரகம் இருக்க பிறந்தவர்கள் சனீஸ்வரனின் பூரண அருளை பெற்றவர்கள் ஆவர். மேற்கூறிய ராசிகள் மற்றும் ஜாதக அமைப்பில் பிறந்த நபர்களுக்கு சனி பகவானின் அருளாற்றல் முழுமையாக இருப்பதால் இவர்களில் பெரும்பாலானவர்கள் பிறருக்கு கீழ்படிந்து, கூறப்படும் உத்தரவுகளை ஏற்று செய்யும் பணிகள், வேலைகள் போன்றவற்றில் ஈடுபடாமல் தாங்களே முதலாளியாக இருக்கும் சொந்த தொழில்கள், வியாபாரங்கள் போன்றவற்றிலேயே அதிகம் ஈடுபடுவர். இத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்கள் சிலர் பிறருக்கு கீழ் பணிபுரியும் வேலைகளில் இருந்தாலும் அது தற்காலிகமாகவே இருக்கும்.

சனி பகவான் மன உறுதிக்கு காரகன் ஆகிறார். அவரின் ஆதிக்கம் நிறைந்த ராசிகள், ஜாதக அமைப்பை கொண்டவர்கள் எத்தனை துயரங்கள், சோதனைகள் ஏற்பட்டாலும் அதை தங்களின் கடின உழைப்பின் மூலம் அவற்றை வென்று வாழ்வில் பொருளாதார தன்னிறைவை அடைவர். இவர்கள் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்க மாட்டார்களே தவிர, இவர்கள் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை தருகின்ற முதலாளிகளாக இருப்பார்கள். ஜாதகத்தில் வேறு சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் இவர்களில் சிலர் உலகளவில் புகழ் பெறக்கூடிய தொழிலதிபர்கள், வியாபாரிகளாக மாறக்கூடும்.

ஜாதகத்தில் “மேஷ” ராசி சனி பகவான் நீச்சமடையும் ராசியாகும். இந்த ராசியில் சனி இருக்க பிறந்த ஜாதகர்களுக்கு கல்வி தகுதி, திறமைகள் போன்றவற்றை அதிகம் இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் இவர்களுக்கு வேலை கிடைக்காது. அப்படி கிடைக்கும் வேலையும் இவர்களின் தகுதிக்கு கீழான, பிறரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அடிமை போல் பணிபுரியும் வேலைகளாகவே இருக்கும். சனி பகவான் இந்த ராசியில் நீச்சமடைவத்தால் மன உறுதியின்றி தங்கள் வாழ்வில் வெற்றி பெற துணிவான முடிவுகளை எடுக்க தயங்கி, கிடைத்த வேலையிலேயே திருப்தியுற்று காலத்தை கடத்தி கொண்டிருப்பர்.

- Advertisement -

ஜாதகத்தில் சனி கிரகத்தின் நிலை நன்றாக இல்லாத போதும் சொந்த தொழில், வியாபாரம் செய்து அதன் மூலம் தாங்களும் முதலாளி ஆக விரும்பும் மற்ற எல்லா ராசியினரும் தாங்கள் தொழில்கள், வியாபாரங்களை தொடங்குவதற்கு முன்பு உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பித்ருக்களுக்கான திதியை சரியான காலத்தில் கொடுத்து வர வேண்டும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பொங்கல், தீபாவளி போன்ற காலங்களில் ஊரை தூய்மையாக்கும் துப்புரவு தொழிலாளிகளுக்கு அன்னதானம் அல்லது புத்தாடைகளை தானமாக கொடுத்தால் உங்கள் மீது மிகுந்த கருணை கொண்டு, நற்பலன்களை அதிகம் ஏற்படுத்துவார் சனி பகவான்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகப்படி யாருக்கெல்லாம் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் தெரியுமா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sontha thozhil yogam in Tamil or Sontha tholil jathagam in Tamil.