Astrology : சூரிய கிரக தோஷம் போக்கும் மிக எளிய பரிகாரங்கள் இதோ

suriyan
- Advertisement -

தோஷங்கள் என்பது பொதுவாக நாம் பிறக்கின்ற நேரத்தில் நமது ஜாதக கட்டத்தில் ஒன்பது கிரகங்களில் ஒன்றோ அல்லது பல கிரகங்களோ பாதகமான நிலையில் இருப்பதால் ஏற்படுகிறது. ஜோதிட கணக்கின் படி மொத்தம் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன இதில் முதலாவதான சூரியன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களுக்கான எளிய பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Suriyan manthiram

நவகிரகங்களில் சூரியன் முதலாவதாக வருகிறது. இந்த சூரியன் தான் ஒருவரின் ஜாதகத்தில் அவரின் தந்தை, அதிகாரம், வலது கண் பார்வை, தலை, கம்பீரம், உடல்பலம் போன்றவற்றிற்கு காரகனாக அமைகிறார். சூரியன் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்தாலும், சூரியன் திசை நடைபெறும் காலங்களிலும் மேற்கண்ட விடயங்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.

- Advertisement -

சென்னைக்கு அருகே செங்குன்றம் பகுதியில் அமைந்திருக்கும் ஞாயிறு சிவன் கோயிலுக்கும், தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சூரியனார் கோயிலுக்கும் சித்திரை மாதங்களில் சென்று வழிபடுவது உங்கள் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருக்கும் சூரியனால் ஏற்படும் தோஷங்களையும், பாதிப்புகளையும் போக்கும்.

Sivan temple

ஞாயிற்று கிழமைகளில் அரச மரத்தை பகல் 10 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாக சுற்றி வந்து வழிபாடு செய்ய வேண்டும். இதே ஞாயிறு அன்று சிவபெருமானுக்கு செந்தாமரை மலரை சமர்ப்பித்து, தீபமேற்றி வழிபடுவதாலும் சூரியனின் தோஷங்கள் விலகும்.

- Advertisement -

சூரியன் கிரக தோஷம் மற்றும் திசை நடக்கும் ஜாதகர்கள் கச கசாவை பொடி செய்து நீரில் கலந்து அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு நிற மலர்களை நீரில் ஊற வைத்து, பின்பு அந்த நீரினால் குளித்து வந்தால் சூரியனால் ஏற்படும் கிரக தோஷ பாதிப்புகள், சூரிய திசை காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

Suryan God

ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் அமையப்பெற்றவர்கள் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை உச்சி பொழுதான ஒரு மணியில் இருந்து இரண்டு மணிக்குள்ளாக யாரேனும் வசதி வாய்ப்பற்ற ஏழைக்கு ஒரு கிலோ கோதுமை தானியங்களை தானம் வழங்குவது நல்லது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு பணவரவு அதிகரிக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Suriyan eliya pariharam in Tamil. It is also called as Suryan pariharam in Tamil or Surya dosham neenga in Tamil or Surya bhagavan pariharam in Tamil or Surya graga dosham in Tamil.

- Advertisement -