12 ராசியினருக்கு இந்த ஆண்டு செல்லவேண்டிய கோவில் எது தெரியுமா ?

astrology

ஒவ்வொரு முறை ஆங்கில புத்தாண்டு பிறக்கும் போதும், அந்த புதிய ஆண்டு தங்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. அப்படி 12 ராசிக்காரர்களும் புதிதாக பிறந்திருக்கும் 2019 ஆம் வாழ்வில் மேன்மைகளை அடைய சென்று வணங்க வேண்டிய கோயில்கள் எது என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷம் ராசியினர் இந்த ஆண்டு தங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறவும், வாழ்வில் வளம் கொழிக்கவும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இரும்பை மகாகாலேஸ்வரர் சிவன் கோயிலுக்கு ஒரு பிரதோஷ தினத்தில் சென்று நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசியினர் இந்த ஆண்டு தங்களின் அனைத்து ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேற, பொருளாதார நிலையில் மேன்மை பெற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருக்கும் காட்டழகிய சிங்கப்பெருமாள் பெயரில் அழைக்கப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை ஸ்வாதி நட்சத்திர தினத்தில் சென்று வழிபட வேண்டும்.

மிதுனம்:

midhunam

மிதுனம் ராசியினர் இந்த ஆண்டு தங்களின் அனைத்து ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேறவும், துரதிர்ஷ்டங்கள் நீங்கவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் தகட்டூர் பைரவர் கோயிலுக்கு அஷ்டமி தினத்தில் சென்று பைரவரை வணங்க நன்மைகள் உண்டாகும்.

கடகம்:

Kadagam Rasi

கடகம் ராசியினர் இந்த ஆண்டு தங்களின் வாழ்வில் நன்மைகள் மற்றும் அதிர்ஷ்டங்கள் மேலோங்க கோவை மாவட்டத்தில் இருக்கும் ஈச்சனாரி ஸ்ரீ விநாயகர் பெருமான் ஆலயத்திற்கு சதுர்த்தி தினத்தில் சென்று வழிபடுவதால் வாழ்வில் பல நன்மையான திருப்பங்கள் ஏற்படும்.

சிம்மம்:

simmam

சிம்மம் ராசியினர் இந்த ஆண்டில் வாழ்வில் சிறப்பான மாற்றங்களை பெறவும், செல்வ வளம் அதிகம் பெறவும் காஞ்சிபுரத்தில் அருள்புரியும் காமாட்சி அம்மனை மாதத்தில் வரும் தசமி தினத்தில் சென்று வழிபடுவதால் அனைத்து செயல்களிலும் சிறப்பான வெற்றிகளை பெற்று, நற்பலன்களை பெறலாம்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசியினர் இந்த ஆண்டு தங்களின் வாழ்வில் மேலான நன்மைகளை பெறவும், அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்படவும் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் திருக்கண்ணமங்கை எனும் ஊரில் இருக்கும் பக்தவத்சலய பெருமாள் மற்றும் கருடாழ்வாரை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி தினத்தில் சென்று வழிபட நன்மைகள் உண்டாகும்.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசிக்காரர்கள் இந்த புதிய ஆண்டில் மேலான நன்மைகள் பெறவும், பொருளாதார நிலையில் உயர்வுகளை பெறவும் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் திருமாணிகுழியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ வாமனபுரீஸ்வரரையும், ஸ்ரீ அம்புஜாட்சி அம்மனையும் மாதத்தில் வரும் சதுர்த்தசி தினத்தில் வழிபட வேண்டும்.

விருச்சிகம்:

virichigam

விருச்சிகம் ராசிக்காரர்கள் இந்த புதிய ஆண்டில் வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிறப்பான உயர்வுகளை அடையவும், சுக போகங்கள் பல பெறவும் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனை வெள்ளிக்கிழமை தினத்தில் சென்று வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் இந்த ஆண்டு பல ஏற்றங்களை பெறவும், செல்வ சிறப்புடன் பல இன்பங்களை அனுபவிக்க திருநெல்வேலி – தூத்துக்குடி வழியில் இருக்கும் முறப்பநாடு ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கைலாசநாதர், சிவகாமி அம்மன் மற்றும் ஸ்ரீ பைரவரை அஷ்டமி தினத்தில் சென்று வழிபட வேண்டும்.

மகரம்:

Magaram rasi

மகரம் ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் இந்த ஆண்டு நிறைவேறாத தங்களின் விருப்பங்கள், ஆசைகள் நிறைவேற தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானை சஷ்டி தினத்தில் சென்று வழிபட வேண்டும்.

கும்பம்:

Kumbam Rasi

கும்பம் ராசியினர் இந்த புதிய ஆண்டில் வாழ்வில் அனைத்து இன்பங்களை பெறவும், தங்களின் விருப்பங்கள் ஆசைகள் நிறைவேறவும் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ராஜமன்னார்குடி ஸ்ரீ வாசுதேவ பெருமாளையும்,ஸ்ரீ செங்கமல தாயாரையும் சனிக்கிழமையில் சென்று வழிபட வேண்டும்.

மீனம்:

meenam

மீனம் ராசியினர் இந்த ஆண்டு தங்களின் வாழ்வில் ஏற்படும் துயரங்கள், கஷ்டங்கள் நீங்கி பொருளாதார உயர்வுகளும், அதிர்ஷ்டங்களும் பெற திருவண்ணாமலை மாவட்டத்தில் எறும்பூர் எனும் ஊரில் இருக்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ பட்டீஸ்வரரை பிரதோஷ தினத்தில் சென்று வணங்குவதால் பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்கான வெற்றிலை பரிகாரம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi kovil valipadu in Tamil. It is also called as Puthandu kovil valipadu in Tamil or 12 rasi puthandu in Tamil or 12 rasi in Tamil or Puthandu koil valipadu in Tamil