12 ராசியினருக்கான வெற்றிலை பரிகாரம்

vetrilai-parigaram

வாழ்வில் பல கஷ்டங்கள், துயரங்கள் போன்றவற்றை அனுபவிக்காத மனிதர்கள் அனேகமாக இல்லை. எப்படிப்பட்ட கஷ்டங்கள் ஏற்பட்ட போதிலும் அதிலிருந்து மீண்டு வர தெய்வ வழிபாடு பலருக்கும் துணை நிற்கிறது. அந்த வகையில் நமது ஜோதிட சாஸ்திரத்தில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசியினருக்கும் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்க முன்னோர்களால் கூறப்பட்ட பரிகார முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

நெஞ்சுரமிக்க மேஷ ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களும், துன்பங்களும் நீங்குவதற்கு ஒரு செவ்வாய்க்கிழமைகளில் ஒரு வெற்றிலையில் மாம்பழத்தை வைத்து முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டு அப்பழத்தை சாப்பிடுவதால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

இன்பங்களை அனுபவிக்கும் விருப்பம் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் தீர்க்கமுடியாத அளவிற்கு ஏற்படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் போக்க செவ்வாய்க்கிழமைகளில் ஒரு வெற்றிலையில் சில மிளகுகள் வைத்து வழிபட்டு சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

மிதுனம்:

midhunam

சிறந்த பேச்சாற்றலை கொண்ட மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் தொடர்ந்து ஏற்படும் பல கஷ்டங்களையும், குறைகளையும் தீர்ப்பதற்கு புதன்கிழமைகளில் வெற்றிலையில் சில மிளகுகளை வைத்து, உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்ட பின்பு அந்த வெற்றிலை மற்றும் மிளகுகளை பிரசாதமாக சாப்பிட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.

கடகம்:

Kadagam Rasi

எல்லோர் மனதை அறிந்து நடந்து கொள்ளும் கடக ரசிகர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், கஷ்டங்கள் போன்றவை தீர வெள்ளிகிழமைகளில் ஒரு வெற்றிலையில் மாதுளம் பழத்தை வைத்து காளி தெய்வத்தை வணங்கிய பின்பு அப்பழத்தை சாப்பிடுவதால் எல்லா துன்பங்களும் நீங்கும்.

சிம்மம்:

simmam

கம்பீரமிக்க சிம்ம ராசியினர் தங்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து துன்பங்கள் மற்றும் துயரங்கள் தீர வியாழக்கிழமைகளில் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கிய பின்பு அப்பழத்தை சாப்பிட்டால் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.

கன்னி:

Kanni Rasi

பிறருடன் இனிமையாக பழகும் கன்னி ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துயரங்கள் ஆகியவை தீர வியாழக்கிழமைகளில் வெற்றிலையில் சில மிளகுகளை வைத்து, உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்ட பின்பு அந்த வெற்றிலை மற்றும் மிளகுகளை பிரசாதமாக சாப்பிட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.

துலாம்:

Thulam Rasi

இனிய குணம் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களும், துன்பங்கள் போன்றவை நீங்க வெற்றிலையில் கிராம்பு வைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்ட பின்பு அந்த வெற்றிலை கிராம்புகளை பிரசாதமாக சாப்பிட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.

விருச்சிகம்:

virichigam

உண்மையை உறக்க கூறும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் தொடர்ந்து ஏற்படும் கஷ்டங்களும், பிரச்சனைகளும் தீர செவ்வாய் கிழமைகளில் வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் உங்களின் எத்தகைய துயரங்களும் தீரும்.

தனுசு:

Dhanusu Rasi

பலவற்றையும் கற்றறியும் ஆர்வம் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் தீர வியாழக்கிழமைகளில் வெற்றிலையில் கற்கண்டு வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு பின்பு அந்த வெற்றிலை கற்கண்டை சாப்பிட்டால் உங்களை வாட்டும் கஷ்டங்கள், கவலைகள் தீரும்.

மகரம்:

Magaram rasi

உறுதியான மனம் கொண்ட மகர ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் கவலைகள், கஸ்டங்கள், துயரங்கள் ஆகியவை தீர சனிக்கிழமைகளில் வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் உங்களின் எல்லா கவலைகளும், கஷ்டங்களும் தீரும்.

கும்பம்:

Kumbam Rasi

விடாமுயற்சி அதிகம் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் தீர சனிக்கிழமைகளில் வெற்றிலையில் நெய் வைத்து காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் உங்களை தொடர்ந்து வாட்டும் அத்தனை துன்பங்கள், துயரங்கள் மற்றும் கவலைகள் தீரும்.

மீனம்:

meenam

ஞானத் தேடல் அதிகம் கொண்ட மீன ராசிகாரர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், துயரங்கள் ஆகியவை தீர ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலையில் சர்க்கரை வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய்கள் போன்றவை தீருவதோடு கஷ்டங்கள், துயரங்களும் தீரும்.

2019 புத்தாண்டு ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

இதையும் படிக்கலாமே:
12 ராசியினர் அதிக நன்மை பெற பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vetrilai pariharam in Tamil. It is also called as 12 rasi pariharam in Tamil or 12 rasi in Tamil or Jothida palan in Tamil.