12 ராசிக்காரர்களுக்கும் தங்கள் ராசிக்குரிய மரத்தை வளர்த்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்! உங்கள் ராசிக்கு நீங்கள் நட வேண்டிய மரம் என்ன?

tree-astro

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மரம் ராசியானதாக இருக்கும். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய அல்லது நட வேண்டிய மரங்கள் என்னென்ன? இதனால் அவர்களுக்கு நடக்கப் போகும் அதிசயங்களும் என்ன? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நம் ராசிக்குரிய மரங்களை வீட்டில் வளர்ப்பதை விட, சமுதாயத்திற்காக சாலை ஓரங்களில் வளர்த்து தானம் செய்யும் பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கும். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்குரிய செவ்வரளி செடியை வீட்டில் பின்புறமாக அல்லது நெடுஞ்சாலைகளில் நட்டு வளர்க்கப்பட்டு வந்தால் வாழ்க்கையில் சகல யோகங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். செவ்வரளி மலரை பைரவருக்கு சாற்றி வழிபட்டு வந்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்துவிடும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்குரிய அத்தி மரத்தை வீட்டில் அல்லது சாலையோரங்களில் வளர்த்து வருவதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறையருள் பெறுவதற்கு அத்தி மரத்தை 11 முறை வலம் வந்து வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசியில் பிறந்தவர்கள் சிவாலயங்களில் வளர்க்கப்படும் வில்வ மரத்தை வழிபட்டு வர நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். வில்வ மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்ற ஒரு ஐதீகம் உண்டு. இது எந்த அளவிற்கு சரி என்றாலும் கோவிலில் சென்று இம்மரத்தை வலம் வருவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசியில் பிறந்தவர்கள் அதீத சக்திகள் கொண்ட மற்றும் திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் போன்ற கோவில்களில் தல விருட்சமாக இருக்கும் பலா மரத்தை வீட்டில் அல்லது பூங்கா போன்ற பொது இடங்களில் வளர்த்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் குருந்த மரத்தை வழிபட்டு வரவும். இந்த மரத்தை பொது இடங்களில் வளர்ப்பது முன்ஜென்ம பாவ வினைகளை கூட தீர்க்கக் கூடிய பரிகாரமாகும். திருப்பெருந்துறையில் ஆவுடையார் கோவிலில் தல விருட்சமாக இம்மரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கன்னி
kanni
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாமரத்தை வளர்த்து வருவது மற்றும் அதனை தானமாக கொடுப்பது பெறற்கரிய பேற்றைப் பெற்றுக் கொடுக்கும். தெய்வீக ஸ்தலங்களில் இருக்கும் மாமரத்தை வலம் வருவது கூடுதல் பலன்களை கொடுக்கும். மாமரத்தை தானமாகவும் கொடுத்து வரலாம்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்தவர்கள் மகிழ மரத்தை வளர்த்து வருவது நல்ல ஒரு அறிவாற்றலை கொடுக்கக் கூடியது ஆகும். வீட்டில் அல்லது பொது இடங்களில் வளர்ப்பது வருமான தடையில் இருக்கும் பிரச்சனைகளை அகற்றும். குடும்பத்தில் அமைதியை நிலவச் செய்யும் என்பது ஐதீகம்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கருங்காலி எனப்படும் மரத்தை வளர்த்து வருவது பேரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பூங்கா போன்ற பொது இடங்களில் அல்லது உங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வளர்த்து வருவது மேலும் மேலும் வளர்வதற்கான முன்னேற்றத்தை கொடுக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அரச மரத்தை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். அரச மரத்தில் இருக்கும் அதீதமான சக்தி உங்கள் ராசிக்கு வருமான ரீதியான பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடியது ஆகும். அரச மரத்தினுடைய தலைப்பகுதியில் சிவனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், வேர்ப்பகுதியில் பிரம்மனும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகரம்
Magaram rasi
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஈட்டி மரம் என்று கூறப்படும் இந்த மரத்தை சமுதாய நன்மைக்காக நடுவது வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களை நீக்கும். எவ்வளவு கடன் பிரச்சினைகள் இருந்தாலும் எளிதில் தீரும் என்பது ஐதீகம். ஈட்டி மரம் தல விருட்சமாகக் கொண்ட கோவில்களுக்குச் செல்வது பெரும் பாக்கியத்தை உண்டு செய்யும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வன்னி மரம் சிறப்பான மரமாக கூறப்பட்டுள்ளது. பொது நன்மைக்காக வன்னி மரத்தை நீங்கள் வளர்த்து வந்தால் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளலாம். வன்னி மரத்தை தலவிருட்சமாகக் கொண்டுள்ள சிவபெருமானை வழிபடுவது சகல யோகங்களையும் பெற்று தரும்.

மீனம்
meenam
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு புன்னை மரம் சிறப்பான மரமாகும். இம்மரத்தை பொது இடங்களிலும், கோவில்களிலும் வளர்த்து வர எந்த விதமான தடைகளும் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். புன்னை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்களுக்குச் சென்று வருவது சகல, சவுபாக்கியங்களையும் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் மணி பிளான்ட் எந்த வடிவத்தில் இருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்? மணி பிளான்ட் செடியை இந்த இடத்தில் வைத்தால் செல்வம் மேலும் மேலும் பெருகி கொண்டே இருக்குமாம் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.